Actress Divyabharathi: விழியில் விழுந்து இதயம் நுழைந்து அட்டகாசம் செய்யும் நடிகை திவ்யபாரதி!

சென்னை: நடிகை திவ்யபாரதி பேச்சுலர் படத்தின் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர். முதல் படத்திலேயே ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து அதிரடியாக ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் பெண்ணான இவர், முதல் படத்திலேயே ஓவர் கவர்ச்சிமூலம் ரசிகர்களை திண்டாட செய்தார். இந்தப் படம் இவருக்கு அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்து வருகிறது. இது மட்டுமில்லாமல் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார் திவ்யபாரதி. இதன்மூலமும் பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார்.

குறுகிய காலத்திலேயே அதிகமான ரசிகர்களை கவர்ந்துள்ளார் திவ்ய பாரதி. மாடலிங் துறையில் நுழைந்த திவ்யபாரதி, பேச்சுலர் படம் மூலம் அதிகமான ரசிகர்களையும் பட வாய்ப்புகளையும் பெற்றுள்ளார். மீண்டும் ஜிவி பிரகாஷுடனேயே கிங்ஸ்டன் படத்தில் நடித்து வருகிறார். இது ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகிவரும் 25வது படம். தற்போது மதில்மேல் பூனை, ஆசை, மகாராஜா ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கில் இவர் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். தெலுங்கில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள GOAT படம் விரைவில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actress Divya bharathi s latest video and Photos in Instagram


நடிகை திவ்யபாரதி: நடிகை திவ்யபாரதி தமிழில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக பேச்சுலர் படம் மூலம் அறிமுகமானவர். கோவையை சேர்ந்த திவ்யபாரதி, மாடலிங் மூலம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு பெற்றவர். தன்னுடைய முதல் படத்திலேயே அதிரடியாக கவர்ச்சியால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்திருந்தார். படத்தில் ஜிவி பிரகாஷுடனான திவ்ய பாரதியின் நெருக்கமான காட்சிகளும் ஏராளமான ரசிகர்களை பெற்றுத் தந்தது. இந்தப் படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார் திவ்யபாரதி. ஜிவி பிரகாஷுடனேயே மீண்டும் கிங்ஸ்டன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஜிவி பிரகாஷுடன் மீண்டும் ஜோடி: ஜிவி பிரகாஷ் தயாரிப்பில் உருவாகிவரும் இந்தப் படம் அவரது 25வது படம் என்ற வகையில் கவனத்தை பெற்றுள்ளது. தற்போது திவ்யபாரதி நடிப்பில் மதில் மேல் காதல், ஆசை, மகாராஜா என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் GOAT படத்தில் நடித்து முடித்துள்ளார் திவ்யபாரதி. இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. அடுத்தடுத்த படங்களில் நடிக்கவும் கமிட்டாகி வருகிறார் திவ்யபாரதி.

சமூகவலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக காணப்படும் திவ்யபாரதி, இதன்மூலமும் பட வாய்ப்புகளை ஈர்த்து வருகிறார். அடுத்தடுத்த போட்டோஷுட்களை எடுத்து அதன் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அடுத்தடுத்து அதீத கவர்ச்சியில் இவரது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பார்க்க முடிகிறது. அவ்வப்போது அடக்க ஒடுக்கமாக புடவையிலும் இவரது புகைப்படங்களை பார்க்க முடிகிறது. ஆனால் அவற்றிலும் கவர்ச்சியை புகுத்த திவ்ய பாரதி தவறுவதில்லை. இதையடுத்து திவ்யபாரதியை இன்ஸ்டாகிராமில் 34 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பாலோ செய்து வருகின்றனர்.

லேட்டஸ்ட் புகைப்படங்கள்: இதனிடையே தற்போது எளிமையான டாப்சில் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோவை பதிவிட்டுள்ளார். நல்ல நீண்ட அழகான தலைமுடியை கொண்டுள்ள திவ்யபாரதி, அதை அப்படியும் இப்படியும் ஆட்டி ரசிகர்களை கட்டிப்போட முயன்றுள்ளார். இதேபோல ரசிகர்களின் விழியில் விழுந்து இதயத்தில் நுழைந்தும் அட்டாசம் செய்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்ட 5 மணிநேரங்களிலேயே இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது. அவரது பக்கத்திலிருந்து ரசிகர்கள் கண்களை அகற்றாமல் இருக்கச் செய்யும் வித்தையை அவர் அறிந்துள்ளதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகினற்னர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X