Divya bharathi : இளைஞர்களின் கனவு கன்னி.. திவ்யா பாரதியின் பிறந்த நாள்.. குவியும் வாழ்த்து!
சென்னை: இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை திவ்யா பாரதி இன்று தனது 33வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு, ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இவர் நடிகர் கதிர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆசை திரைப்படத்திலும், பிரபல நடிகர் ஜிவி பிரகாஷ் நடிப்பில் உருவாகி வரும் கிங்ஸ்டன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.
நடிகை திவ்யா பாரதி 1992ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தார். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங் துறையை தேர்வு செய்து அதில் கவனத்தை செலுத்தினார். கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த பேச்சிலர் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் திரைக்கு வந்த பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். முதல் படத்திலேயே தாராளமாக கவர்ச்சி காட்டி நடித்திருந்தார்.

மகாராஜா: அண்மையில் நித்திலன் சுவாமிநாதன் இயக்கிய மகாராஜா படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்திருந்தார். திவ்யா பாரதி நடித்தது ஒரு சில காட்சிகளே என்றாலும், ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இந்த படத்தில், நட்டி நட்ராஜ், அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், அபிராமி, பாரதிராஜா, தேனப்பன், அருள்தாஸ் மற்றும் சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம், மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. தமிழில் உருவாகி வரும் ஆசை என்கின்ற படத்தில் நடிகர் கதிருடனும், மற்றொரு படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷுடனும் நடித்து வருகிறார்.

பிறந்த நாள்: சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா பாரதி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நடிகை திவ்யா பாரதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மூன்று புள்ளி ஆறு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை திவ்யா பாரதி இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு, ரசிகர்கள், திரைப்பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.



Click it and Unblock the Notifications