Divya Duraisamy: வேம்பு கேரக்டருக்காக 6 மாசம் யாருகிட்டயும் பேசாம இருந்தேன்.. திவ்யா துரைசாமி ஓபன்!
சென்னை: நடிகை திவ்யா துரைசாமி அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கேற்று அதிரடி கிளப்பி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திவ்யா துரைசாமி, கலையரசன், நிகிலா விமல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வெளியான வாழை படம் மிகச்சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது.
இந்தப் படம் திவ்யாவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இதனிடையே, வாழை படத்தில் வேம்பு என்ற கேரக்டரில் தன்னுடைய இயல்பிற்கு முற்றிலும் மாறுபட்ட கேரக்டரில் நடித்துள்ளதாக திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார். இந்த படம் தனக்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் மகிழ்ச்சி கூறியுள்ளார்.

நடிகை திவ்யா துரைசாமி: இயக்குனர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள். கர்ணன். மாமன்னன் என அடுத்தடுத்த சமூக நீதி பேசும் திரைப்படங்களை கொடுத்துள்ளார். இந்த படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது இயக்கத்தில் வாழை படம் வெளியாகியுள்ளது. இந்த படத்தை தன்னுடைய சொந்த கதையை மையமாக வைத்து உருவாக்கியதாக மாரி செல்வராஜ் கூறியுள்ளார். கலையரசன், நிகிலா விமல், குக் வித் கோமாளி திவ்யா துரைசாமி உள்ளிட்ட நடிகர்கள் லீட் கேரக்டர்களில் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
வாழை படம்: இந்த படத்தின் மூலம் மாரி செல்வராஜ் தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். வாழை படம் ரிலீசாகி மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்துள்ள நிலையில் படத்தில் திவ்யா துரைசாமி ஏற்று நடித்துள்ள வேம்பு கேரக்டரும் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து பாராட்டுகளை குவித்து வருகின்றது. சமீபத்தில் வேம்பு கேரக்டரில் நடித்துள்ள திவ்யா துரைசாமியை நேரில் சந்தித்த இயக்குனர் மிஷ்கின் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார். திவ்யா துரைசாமி தமிழ் சினிமாவின் சிறந்த படத்தில் நடித்துள்ளதாகவும் படத்தில் திவ்யா துரைசாமி, சிறுவன் மற்றும் கலையரசன் ஆகியோர் நடிப்பு மிகவும் அருமையாக இருந்ததாகவும் தானும் எதிர்காலத்தில் திவ்யாவுடன் பணியாற்றுவேன் என்றும் மிஷ்கின் பாராட்டியுள்ளார்.
6 மாதங்கள் பேசாமல் இருந்தேன்: இந்நிலையில் வாழை படம் குறித்து திவ்யா துரைசாமி கொடுத்துள்ள பேட்டியில் இந்த படத்திற்காக தான் ஆறு மாதங்கள் யாருடனும் பேசாமல் மௌனம் காத்ததாக கூறியுள்ளார். தான் எப்பொழுதுமே அனைவருடனும் சரளமாக பேசும் குணம் உடையவள் என கூறியுள்ள திவ்யா துரைசாமி, இந்த கேரக்டரில் அது வெளிப்படாமல் இருப்பதற்காக தான் அதிகமாக பேசாமல் தன்னுடைய பேச்சை குறைத்துக் கொண்டதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய பார்வையையும் தான் மாற்றிக் கொண்டதாகவும் கூறியுள்ளார். எக்ஸ்ப்ரஸிவ்வான கண்களை வெளிப்படுத்தாமல் தன்னுடைய கண்களில் அன்பு, கருணை உள்ளிட்டவை வெளிப்பட வேண்டும் என்று மாரி செல்வராஜ் கேட்டதற்கு இணங்க தன்னுடைய பார்வையை மாற்றிக் கொண்டதாகவும் திவ்யா துரைசாமி தெரிவித்துள்ளார்.
தோள்பட்டை வலி: மேலும் வாழைத் தாரை தூக்கி தூக்கி தன்னுடைய தோள்பட்டையில் மிகப்பெரிய அளவில் வலி ஏற்பட்டதாகவும் அது சரியாவதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொண்டதாகவும் திவ்யா துரைசாமி கூறியுள்ளார். இந்த கேரக்டருக்காக தான் அதிக அளவில் சிரமப்பட்ட நிலையிலும் தற்போது அனைவராலும் பாராட்டப்படும் நிலையில் மிகப்பெரிய உற்சாகம் ஏற்படுவதாக திவ்யா துரைசாமி கூறியுள்ளார். படத்தில் காதல் காட்சிகளிலும் தான் அதிகமாக பேசாமல் கண்களிலேயே தன்னுடைய காதலை வெளிப்படுத்தும் வகையில் தன்னுடைய கேரக்டர் அமைந்திருந்ததாகவும் திவ்யா தெரிவித்துள்ளார்.
ஜானகி அம்மா நடிப்பை பார்த்து அழுதுட்டேன்: எக்ஸ்ட்ராவாக ஒரு சின்ன சிரிப்பை வெளிப்படுத்தினாலும் உடனடியாக டேக் வாங்கி விடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனிடையே கிளைமாக்ஸ் காட்சியில் ஜானகி அம்மாவின் நடிப்பு தனக்கு அழுகையை ஏற்படுத்தியதாகவும் திவ்யா தெரிவித்துள்ளார். படத்தில் நடிக்கும் போது இதை தன்னால் உணர முடியவில்லை என்று கூறியுள்ள திவ்யா துரைசாமி தற்போது மூன்று முறை படத்தை பார்த்துவிட்டதாகவும் ஒவ்வொரு முறையும் தான் அழுதுவிட்டே வெளியில் வந்ததாகவும் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











