'பாப்பா, உங்களை மாதிரியே இருக்கு...' தனது 2 மாதக் குழந்தையின் போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகை!

By

டெக்சாஸ்: அமெரிக்காவில் பிறந்த தனது இரண்டு மாத குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார், பிரபல நடிகை

Recommended Video

ஒரே வருடத்தில் 8 படங்களில் புக்கான சீரியல் நடிகை.. யார் தெரியுமா? இன்றைய டாப் 5 பீட்ஸில்!

குழந்தை நட்சத்திரமாக மலையாள சினிமாவில் அறிமுகமானவர் திவ்யா உன்னி. தமிழில் சபாஷ், கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம், ஆண்டான் அடிமை ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவர் பிரபல நடன கலைஞரும் ஆவார். பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் உட்பட பல்வேறு நடனங்களை கற்றுள்ளார். நடனத்துக்காக பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

விவாகரத்து

விவாகரத்து

சுதிர் சேகர் என்பவரை கடந்த 2002 ஆம் ஆண்டு இவர் திருமணம் செய்தார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் அருண் குமார் என்பவரைத் திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டிலானார் திவ்யா.

நடனப் பள்ளி

நடனப் பள்ளி

ஹூஸ்டன் நகரில் ஶ்ரீபடம் ஸ்கூல் ஆப் ஆர்ட்ஸ் என்ற நடனப் பள்ளியை நடத்தி வருகிறார். அங்கு பரதநாட்டியம், குச்சுப்புடி, மோகினியாட்டம் ஆகிய நடனங்களை கற்றுக் கொடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகை திவ்யா உன்னி கர்ப்பமானார். இதையடுத்து அவருக்கு அமெரிக்காவில் வளைகாப்பு நடந்த புகைப்படங்களை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார்.

ஐஸ்வர்யா

ஐஸ்வர்யா

பின்னர் கர்ப்பத்துடன் கிறிஸ்துமஸ் கொண்டாடிய புகைப்படங்களையும் வெளியிட்டிருந்தார். பின்னர் அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இதுபற்றி, எங்களுக்கு புதிய இளவரசி பிறந்துள்ளார். அவருக்கு ஐஸ்வர்யா என்று பெயர் வைத்துள்ளோம். இந்த இளவரசிக்கு உங்கள் அன்பையும் ஆசிர்வாதத்தையும் எதிர்பார்க்கிறோம் என்று இன்ஸ்டாகிராமில் கூறியிருந்தார்.

போட்டோவுக்கு போஸ்

போட்டோவுக்கு போஸ்

இந்நிலையில் தனது இரண்டு மாத குழந்தையின் போட்டோவை அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக, இது இரண்டு மாத குழந்தைதான். ஆனால், போட்டோவுக்கு எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பது ஏற்கனவே தெரிகிறது என்று கூறியுள்ளார். குழந்தை, நடிகை திவ்யாவை போலவே இருப்பதாக சிலரும் அப்பாவை போல இருப்பதாக சிலரும் கூறி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X