துஷாரா விஜயன் பிறந்தநாளில் வீரதீர சூரன் டீம் செஞ்ச சம்பவம்.. கொல மாசு சாரே!

சென்னை: நடிகை துஷாரா விஜயன் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி வேட்டையன் டீம் சார்பில் லைகா நிறுவனம் அவருக்கு தனது எக்ஸ் தள பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இதே போல அவர் தற்போது வீரதீர சூரன் படத்தில் நடித்து வரும் சூழலில் ஹெச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் பிறந்தநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது.

அடுத்தடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்துவரும் துஷாரா விஜயன் தமிழில் போதை ஏறி புத்தி மாறி படம் மூலம்தான் என்ட்ரி கொடுத்திருந்தார். ஆனால் அவருக்கு சார்பட்டா பரம்பரை படம்தான் மிகப்பெரிய அறிமுகத்தை கொடுத்தது. அடுத்தடுத்து அழுத்தமான கதைக்களங்களில் நடித்துவரும் துஷாரா விஜயனுக்கு தமிழில் சிறப்பான படங்கள் அமைந்து வருகின்றன.

dushara vijayan veera dheera sooran movie tamil cinema

நடிகை துஷாரா விஜயன்: நடிகை துஷாரா விஜயன் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து சிறப்பான ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழில் தனுஷ், ஆர்யா, ரஜினிகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள துஷாரா விஜயன், நடிப்பில் சமீபத்தில் அடுத்தடுத்து ராயன் மற்றும் வேட்டையன் படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்துள்ளன. இந்நிலையில், அடுத்ததாக விக்ரமிற்கு ஜோடியாக வீரதீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் துஷாரா. இந்தப் படத்திலும் இவரது கேரக்டர் மிகச்சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அடுத்தடுத்த படங்கள்: தமிழில் போதை ஏறி புத்தி மாறி படம்மூலம் என்ட்ரி கொடுததாரும் ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படம்தான் சிறப்பாக அமைந்தது. இதில் ஆர்யா மனைவியாக மாரியம்மா என்ற கேரக்டரில் அதகளம் செய்திருந்தார் துஷாரா. இந்த கேரக்டர் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து தமிழில் துஷாராவிற்கு மாஸான அறிமுகத்தை கொடுத்தது. இந்தப் படத்தை தொடர்ந்து நட்சத்திரம் நகர்கிறது உள்ளிட்ட படங்களில் நடித்திருந்த துஷாரா, நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ராயன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது. இந்தப் படம் தனுஷின் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியானது.

ராயன். வேட்டையன் படங்கள்: படத்தில் தனுஷுக்கு தங்கையாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். மிகவும் அழுத்தமான இந்த கேரக்டர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து படத்திற்கும் அதன் வெற்றிக்கும் துணை நின்றது. இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியான ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திலும் ராயன் படம் போன்றதொரு கேரக்டரில் நடித்திருந்தார் துஷாரா விஜயன். அடுத்தடுத்த ஒரே மாதிரியான கேரக்டர்களை இவர் ஏற்று இருந்தது ரசிகர்களை கேள்வி எழுப்ப வைத்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக வீரதீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் துஷாரா விஜயன்.

துஷாரா பிறந்தநாள் போஸ்டர்: இந்த படத்திலும் அவருக்கு அழுத்தமான கேரக்டரே அமைந்துள்ளது. இந்நிலையில் இன்றைய தினம் தன்னுடைய பிறந்தநாளை துஷாரா விஜயன் கொண்டாடி வருகிறார். இதையடுத்து வேட்டையன் படத்தயாரிப்பு நிறுவனமான லைகா அவருக்கு வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளது. இதையொட்டி வீடியோவையும் வெளியிட்டுள்ளது. இதேபோல வீரதீர சூரன் தயாரிப்பு நிறுவனமான ஹெச்ஆர் பிக்சர்ஸ் நிறுவனமும் துஷாரா விஜயனின் கேரக்டரை வெளிப்படுத்தும் வகையில் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. இதில் நடிகர் விக்ரமும் இடம்பெற்றுள்ளார். இருவரும் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தாத வகையில் ஆனால் அதே சமயத்தில் மிகவும் அழுத்தமான லுக்கில் இந்த போஸ்டரில் காணப்படுகின்றனர்.

அழுத்தமான கேரக்டர்கள்: முன்னதாக வீரதீர சூரன் படத்தின் டைட்டில் டீசர் உள்ளிட்டதை வெளியாகி படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த அழுத்தமான கேரக்டர்களை செய்து வரும் துஷாரா விஜயனுக்கு அவரது ஒரிஜினல் கேரக்டரான ஸ்டைலிஷ்ஷான ஹீரோயின் கேரக்டர்கள் அமையுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். முன்னதாக வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டின் போது துஷாரா விஜயன் குறித்து பேசிய நடிகர் ரஜினிகாந்த், கடற்கரையில் கிழிந்த ஜீன்ஸை அணிந்து கொண்டு அவர் நின்று கொண்டிருந்ததாக குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில் இது போன்ற மாடர்ன் லுக்கில் அவருக்கு கேரக்டர்கள் அமையுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. விரைவில் இதற்கான தீர்வு துஷாராவிற்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X