துஷாராவை பார்த்து எழுந்து நின்ற ரஜினிகாந்த்.. எல்லாரையும் ரொம்ப வம்பிழுப்பதாக குற்றச்சாட்டு!

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்து அடுத்தடுத்த படக்குழுவினரின் பேட்டிகளை யூடியூபில் பார்க்க முடிகிறது. அந்த வகையில் இந்த படத்தின் நாயகிகள் மஞ்சுவாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங், அபிராமி உள்ளிட்டவர்களும் படம் குறித்தும் ரஜினியுடன் இணைந்து நடித்தது குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்து உள்ளனர்.

படத்தில் நடிகை துஷாரா விஜயன் மிகவும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு தனுஷின் ராயன் படம் துஷாரா விஜயன் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. அடுத்ததாக வேட்டையன் படம் அவரது நடிப்பில் ரிலீசாகவுள்ள நிலையில், தற்போது படம் குறித்த அடுத்தடுத்த பேட்டிகளை துஷாரா விஜயன் கொடுத்து வருகிறார்.

rajinikanth vettaiyan movie dushara vijayan

நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்த படத்தின் அதிகப்படியான ப்ரோமோஷன்கள் தற்போது நடந்து வருகிறது. அந்த வகையில் தற்போது துஷாரா விஜயன் கொடுத்த பேட்டியில் நடிகர் ரஜினிகாந்தின் எளிமை குறித்து பேசியுள்ளார். ஒரேயொரு சூப்பர்ஸ்டார்தான் என்றும் ஒரேயொரு ரஜினி சார்தான் என்றும் அவர் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். இந்த வயதிலும் அவருடைய எனர்ஜி சான்சே இல்லை என்றும் தன்னுடைய வியப்பை தெரிவித்துள்ளார். தான் நடித்த நட்சத்திரம் நகர்கிறது படத்தை ரஜினிகாந்த் பாராட்டியதாகவும் அவர் கூறியுள்ளார்.

துஷாரா விஜயன் ஆச்சர்யம்: மேலும் தன்னுடைய பேட்டிகள், யூடியூப் வீடியோக்களை பார்த்துள்ளதாகவும் ரஜினிகாந்த் கூறியதாகவும், அனைவரையும் தான் வம்பிழுப்பதாகவும் ரஜினி கூறியதையும் துஷாரா விஜயன் தன்னுடைய பேட்டியில் கூறியுள்ளார். தன்னுடைய காட்சியின் சூட்டிங் வரும் வரையில் நடிகர் ரஜினிகாந்த் சூட்டிங் ஸ்பாட்டிலேயே ஒரு சேரை போட்டுக் கொண்டு ஸ்டைலாக அமைந்திருப்பார் என்றும் தன்னுடைய காட்சி குறித்து உதவி இயக்குநர் கூற வந்தவுடன் ரெடியா என்று உடனடியாக கேட்டுவிட்டு எழுந்திருப்பார் என்றும் கூறிய துஷாரா விஜயன், இத்தகைய எனர்ஜியை அவர் எங்கிருந்து பெறுகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ரஜினியை ரசிக்கும் படக்குழுவினர்: ரஜினி ஸ்பாட்டில் இருந்தால் அந்த இடமே மிகவும் சைலண்டாக இருக்கும் என்றும் தான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் தூரமாக சேரை போட்டுக் கொண்டு அவரையே பார்த்துக் கொண்டிருப்போம் என்றும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். செட்டில் வேலை இல்லாத போதும் தன்னுடைய உதவியாளர்களும் அவ்வப்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் வந்து ரஜினியை பார்த்துவிட்டு செல்வார்கள் என்றும் கூறியுள்ளார். இதனிடையே தங்களின் முதல் சந்திப்பிலேயே ரஜினிகாந்த் தன்னை பற்றி அதிகமான விஷயங்களை பகிர்ந்ததாகவும் துஷாரா விஜயன் கூறியுள்ளார்.

எழுந்து நிற்கும் ரஜினிகாந்த்: தான் அவர் இருக்கும் பக்கம் சென்றால்கூட, எழுந்து நின்று, தனக்கும் சேர் போட சொல்லி சேர் வரும்வரை அவரும் நின்றுக் கொண்டிருப்பார் என்றும் துஷாரா கூறியுள்ளார். முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் இசை வெளியீட்டின் போது தன்னைப் பற்றி பேசியது குறித்தும் அவர் ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார். இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த் தான் முதல்முறையாக துஷாரா விஜயனை பார்த்தபோது கிழிந்த ஜீன்ஸ் போட்டுக் கொண்டு கடற்கரை ஓரமாக நின்று கொண்டிருந்ததாகவும் யார் இந்த சின்ன பெண் என்று தான் படக்குழுவினரிடம் கேட்டபோது அவர்கள் துஷாரா விஜயன் என்று அறிமுகப்படுத்தியதாகவும் கூறியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X