துஷாராவை பார்த்து பொறாமைப்பட்ட நடிகர் தனுஷ்.. அட இதுதான் காரணமா?

சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படம் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி, வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்தில் நடிகை துஷாரா விஜயன் ரஜினிகாந்துடன் இணைந்து லீட் கேரக்டரில் நடித்துள்ளார். சில வாரங்களுக்கு முன்னதாக தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவான ராயன் படத்திலும் முக்கியமான கேரக்டரில் துஷாரா விஜயன் நடித்திருந்தார்.

இந்நிலையில் வேட்டையன் படத்தில் ரஜினிகாந்துடன் துஷாரா இணைந்துள்ளது குறித்து நடிகர் தனுஷ் தன்னிடம் கூறிய விஷயத்தை அவர் தனது பேட்டியில் தற்போது பகிர்ந்துள்ளார். வேட்டையன் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவரும் துஷாரா, இதுகுறித்து வியப்பு தெரிவித்துள்ளார்.

dhanush rajinikanth dushara vijayan

நடிகை துஷாரா விஜயன்: நடிகை துஷாரா விஜயன் தமிழ், தெலுங்கு, மலையாள மொழி படங்களில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து வருபவர். இவரது நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக வெளியான ராயன் படத்தை இயக்கி நடித்திருந்தார் தனுஷ். இந்த படத்தில் துஷாரா விஜயன் அவரது தங்கையாக நடித்திருந்தார். முன்னதாக பேட்டியொன்றில் பேசியிருந்த துஷாரா விஜயன், தான் தனுஷுடன் இணைந்து நடிக்க மிகவும் ஆர்வத்துடன் இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் அவர் நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ள வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது.

வேட்டையன் படம்: துஷாராவிற்கு வேட்டையன் படத்தில் மிகவும் அழுத்தமான கேரக்டர் அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. வேட்டையன் படத்தின் ஆடியோ லான்ச்சின் போதும் துஷாரா விஜயன் குறித்து தனியாக குறிப்பிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசியிருந்தார். இது அனைத்து தரப்பினரையும் கவர்ந்ததுடன் துஷாரா விஜயனையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியிருந்தது. இது குறித்து அவர் தனது சமீபத்திய பேட்டியில் உணர்ச்சிவசப்பட்டு பேசியதை பார்க்க முடிந்தது. ரஜினிகாந்தின் எளிமை மற்றும் ஷூட்டிங் ஸ்பாட்டில் சக நடிகர்களுடன் அவர் பழகும் பண்பு உள்ளிட்டவற்றை மிகவும் பாராட்டி பேசியிருந்தார் துஷாரா விஜயன்.

துஷாரா மீது தனுஷ் பொறாமை: இந்நிலையில் அவர் தற்போது கொடுத்துள்ள பேட்டியில் நடிகர் தனுஷ் குறித்து பேசியுள்ளார். வேட்டையன் படத்தின் ஷூட்டிங் மற்றும் ராயன் படத்தின் ஷூட்டிங் ஒரே இடத்தில் நடந்த நிலையில் தான் ரஜினிகாந்துடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடிப்பது குறித்து தனுஷுடன் பகிர்ந்துள்ளார் துஷாரா விஜயன். இதைக் கேட்டு துஷாரா மீது பொறாமையாக இருப்பதாக தனுஷ் கூறியுள்ளார். இதை தற்போது தன்னுடைய பேட்டியில் பேசியுள்ள துஷாரா விஜயன், தனுஷ் போன்ற ஒரு பெரிய நடிகர் தன் மீது பொறாமையாக இருப்பதாக கூறியது தன்னை மிகவும் உணர்ச்சிவசப்படுத்தியதாகவும் கூறியுள்ளார்.

கனவு கண்ட துஷாரா: தனுஷுடன் இணைந்து நடிப்பது குறித்து தான் முன்னதாக பலமுறை கனவு கண்டதாகவும், அவருடன் நடிப்பதாக ரிகர்சல் எல்லாம் பார்த்ததாகவும் அது ராயன் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் துஷாரா மேலும் கூறியுள்ளார். தனுஷ் சர்வதேச அளவில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவராக இருந்த போதிலும் அவர் எப்போதுமே தான் ரஜினிகாந்தின் ரசிகன் என்று கூறிக் கொள்வார். அந்த வகையில் அவர் ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில் அவர் துஷாரா ரஜினியுடன் நடிப்பது குறித்து இவ்வாறு பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X