Dushara Vijayan: ரஜினி சாரை பார்க்க போறதுக்கு முன்னாடி காய்ச்சலே வந்துடுச்சு.. துஷாரா ஓபன்!

சென்னை: அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் துஷாரா விஜயன், தமிழில் ஆர்யா ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் பா ரஞ்சித் இயக்கத்தில் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அவருக்கு தமிழில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது.

சமீபத்தில் தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் அவரது தங்கையாக மாஸ் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் துஷாரா விஜயன். இதையடுத்து தற்போது விக்ரம் ஜோடியாக வீரதீர சூரன் படத்திலும் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தில் முக்கியமான ஒரு ரோலிலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் ரஜினியுடன் தான் நடித்தது கனவு போல இருந்ததாக துஷாரா தெரிவித்துள்ளார்.

Rajinikanth Dushara Vijayan Vettaiyan movie

நடிகை துஷாரா விஜயன்: நடிகை துஷாரா விஜயன் அநீதி, கழுவேத்தி மூர்க்கன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். ஆனாலும் இவருக்கு பா ரஞ்சித் -ஆர்யா கூட்டணியில் வெளியான சார்பட்டா பரம்பரை படம் மிகப்பெரிய அளவில் கவனத்தைப் பெற்றுத் தந்தது. இதையடுத்து தமிழில் அடுத்தடுத்த முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனுஷ் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியான ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார் துஷாரா. இந்த படம் வரவேற்பிலும் வசூலிலும் சாதனை படைத்துவருகிறது.

வேட்டையன் படம்: அடுத்ததாக விக்ரம் ஜோடியாக வீரதீர சூரன் படத்திலும் லீட் கேரக்டரில் நடித்து வருகிறார் துஷாரா விஜயன். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உடன் இணைந்து வேட்டையன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ராயன் படத்தை போலவே துஷாராவிற்கு மிகவும் வெயிட்டான கேரக்டர் அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது வேட்டையன் படம் குறித்து பேசியுள்ள துஷாரா விஜயன், இந்த படத்தில் முதல் காட்சியில் ரஜினியுடன் மறுநாள் நடிக்கவிருந்த சூழலில் முந்தைய நாள் தனக்கு காய்ச்சலே வந்து விட்டதாக கூறியுள்ளார். அவருடன் இணைந்து நடித்தது தனக்கு கனவு மாதிரி இருந்ததாகவும் கூறியுள்ளார்.

கனவு போன்ற படம்: ஒவ்வொரு நடிகருக்கும் ரஜினியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற கனவு இருக்கும் என்றும் தனக்கு அந்த கனவு மிகச் சிறப்பான வகையில் நடந்து முடிந்துள்ளதாகவும் துஷாரா விஜயன் மேலும் தெரிவித்துள்ளார். தான் அவருடன் இணைந்து நடித்ததை இன்னமும் தன்னால் நம்ப முடியவில்லை என்றும் துஷாரா தெரிவித்துள்ளார். அவருடன் இணைந்து நடித்தது மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்ததாகவும் படத்தில் தனக்கு மிகவும் வெயிட்டான ரோல் என்றும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார். இதேபோல பகத் பாசில் மிகப்பெரிய நடிகர் என்றும் அவருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் வேட்டையன் படம் பெற்றுக் கொடுத்துள்ளதாக துஷாரா உற்சாகம் தெரிவித்துள்ளார்.

துஷாரா பிளான்: தமிழில் வளர்ந்துவரும் இளம் நடிகையாக தன்னுடைய நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவருபவர் துஷாரா விஜயன். இவர் தனது சமீபத்திய பேட்டியில் தன்னுடைய 35 வயது வரை மட்டுமே படங்களில் நடிப்பேன் என்றும் அதன் பிறகு படங்களில் நடிப்பதில் இருந்து ஓய்வு பெற்று உலகை வலம் வருவேன் என்றும் தெரிவித்துள்ளார். ரசிகர்களுக்கு இந்த விஷயம் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் அவர் தன்னுடைய கனவை நோக்கிய பயணத்தை மேற்கொள்ள உள்ளதாக கூறுவது மிகப்பெரிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X