Dushara Vijayan: 35 வயசு வரைக்கும்தான் நடிப்பேன்.. என்ன துஷாரா இப்படி சொல்லியிருக்காங்க!
சென்னை: நடிகை துஷாரா முதல் படத்திலேயே பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்த படம் அவருக்கு மிகச் சிறப்பாக கை கொடுத்த நிலையில் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்புகள் குவிந்து வருகின்றன.
தற்போது தனுஷுடன் ராயன் படத்தில் நடித்துள்ள துஷாரா, அடுத்ததாக விக்ரமின் வீர தீர சூரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ராயன் படம் வரும் 26ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ள நிலையில் அந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று பேசி வருகிறார் துஷாரா விஜயன்.

நடிகை துஷாரா விஜயன்: நடிகை துஷாரா விஜயன் அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்/ தமிழில் போதை ஏறி புத்தி மாறி என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த துஷாரா விஜயனுக்கு பா ரஞ்சித்துடன் இணைந்திருந்த சார்பட்டா பரம்பரம் படம்தான் சிறப்பான வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. இந்தப் படத்தில் அவர் ஏற்று நடித்திருந்த மாரியம்மா கேரக்டர் ரசிகர்களின் இதய சிம்மாசனத்தில் அவரை ஏற்றி வைத்து அழகுப் பார்த்தது. தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகிறது. தற்போது தனுசின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள ராயன் படத்தில் நடித்துள்ளார் துஷாரா.
ராயன் பட பிரமோஷன்கள்: ராயன் படத்தில் தனுஷின் தங்கையாக துஷாரா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் தனுஷ் தன்னை ஒரு இயக்குனராக மிகவும் அதிகமாக கவர்ந்ததாக நடிகை துஷாரா தனது பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். ராயன் படம் வரும் 26ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி அடுத்தடுத்த பிரமோஷன்களில் பங்கேற்று வருகிறார் துஷாரா. அடுத்தடுத்த பேட்டிகளையும் கொடுத்து வருகிறார். இயக்குநராக கேமராவிற்கு பின்னால் இருந்து ஆக்சன் என்று கூறிய மறுநொடி கேமராவுக்கு முன்பு மிகப்பெரிய நடிகராக தனுஷ் மாறிவிடுவார் என்று தனுஷிற்கு துஷாரா விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
35 வயதுக்கு மேல் நடிக்க மாட்டேன்: ராயன் படம் தன்னுடைய திரையுலக வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என்று கூறியுள்ள துஷாரா விஜயன், தனுஷின் மிகப்பெரிய ரசிகை தான் என்றும் அவருடன் இணைந்து பணியற்ற வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவு ராயன் படம் மூலம் நனவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உணர்வை தன்னால் விவரிக்கவே முடியவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து பேசிய துஷாரா தான் 35 வயதுக்கு பிறகு நடிப்பிலிருந்து விலகிவிடுவேன் என்று கூறியுள்ளார். தற்போது தனக்கு 26 வயதாவதாகவும் தனது 35 வயதிற்கு பிறகு தான் இந்த உலகத்தில் உள்ள அனைத்து இடங்களையும் சுற்றிப் பார்க்க கிளம்பி விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.
உலக சுற்றுப்பயணம்: இந்த உலகத்தில் நான் பார்க்காத இடங்களே இல்லை என்பதை உறுதி செய்வதாக தன்னுடைய உலக சுற்றுப்பயணம் இருக்கும் என்றும் துஷாரா தெரிவித்துள்ளார். அடுத்தடுத்த படங்களில் சிறப்பாக இணைந்து நடித்து வரும் துஷாரா விஜயன், ராயன் படத்தை தொடர்ந்து நடிகர் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கும் நிறைவடைந்து படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











