Dushara vijayan :கதைக்கு தேவைன்னா அப்படியும் நடிப்பேன்.. துஷாரா விஜயன் பளிச்!
சென்னை : கடந்த 2019ம் ஆண்டில் வெளியான போதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு என்ற படத்தின்மூலம் தமிழில் அறிமுகமானவர் துஷாரா விஜயன்.
இந்தையடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா லீட் கேரக்டரில் நடித்திருந்த சார்பட்டா பரம்பரை படத்திலும் நாயகியாக நடித்திருந்தார்.
தற்போது அருள் நிதிக்கு ஜோடியாக கழுவேத்தி மூர்க்கன் படத்திலும் நடித்துள்ளார். அடுத்தடுத்து துஷாரா நடித்துவரும் படங்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத் தந்து வருகின்றன.

கவர்ச்சியாக நடிக்கத் தயார் என துஷாரா பேட்டி: நடிகை துஷாரா விஜயன் அடுத்தடுத்த சிறப்பான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். கடந்த 2019ம் ஆண்டில் அவரது நடிப்பில் வெளியான போதை ஏறிப் போச்சு புத்தி மாறிப் போச்சு படத்தின்மூலம் இவர் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து சிறப்பான படங்களில் சிறப்பான கேரக்டர்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறார் ஆர்யா ஜோடியாக பா ரஞ்சித் இயக்கதில் வெளியான சார்ப்பட்டா பரம்பரை படத்தில் இவர் நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் மாரியம்மாவாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் துஷாரா விஜயன். இந்தப் படத்தின் அடுத்த பாகம் இந்த ஆண்டின் இறுதிக்குள் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் படத்தில் துஷாரா இடம்பெறுவாரா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, இரண்டாவது பாகத்தில் தான் இடம்பெற்றால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றும் அழைப்பிற்காக காத்திருப்பதாகவும் தனது சமீபத்திய பேட்டியில் துஷாரா தெரிவித்துள்ளார்.

தற்போது அருள்நிதி நடிப்பில் வெளியாகியுள்ள கழுவேத்தி மூர்க்கன் படத்திலும் கிராமத்து கெட்டப்பில் துஷாரா விஜயன் நடித்துள்ளார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூலில் சிறப்பாக அமைந்து வருகிறது. இந்நிலையில் தான் திரைப்படங்களை தேர்வு செய்வதில் மிகவும் கவனமாக செயல்பட்டு வருவதாக துஷாரா தெரிவித்துள்ளார். கழுவேத்தி மூர்க்கன் படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கவிதா கேரக்டர் அவரது மனதிற்கு நெருக்கமான கேரக்டர் என்றும் அருள்நிதி மிகவும் அர்ப்பணிப்புள்ள நடிகர் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே படத்தின் கதையும் கேரக்டரும் சரியாக அமைந்தால் கவர்ச்சியாக நடிக்கவும் தான் தயார் என்றும் அவர் கூறியுள்ளார். அவர் இதுவரை ஏற்று நடித்துள்ள கேரக்டர்களில் கவர்ச்சியாக நடிக்க அவருக்கு சந்தர்ப்பம் கிடைக்காத நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் எளிதில் கனெக்ட் ஆகும் கேரக்டர்களில் நடிக்க தான் ஆர்வம் காட்டுவதாகவும் துஷாரா விஜயன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அதிரடி சண்டை போடும் நாயகி கேரக்டரில் நடிக்க தான் மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சில படங்களுக்கு எதிராக சர்ச்சைகள் எழும் நிலையில், படத்தை, படமாக பார்க்க வேண்டும் என்பதே தன்னுடைய விருப்பம் என்றும் துஷாரா தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். தற்போது பாலாஜி சக்திவேல் இயக்கத்திலும் வசந்தபாலன் இயக்கத்தில் அநீதி படத்திலும் நடித்து வருவதாகவும் துஷாரா விஜயன் அப்டேட் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











