தமிழ்லயும் கண்டுக்கல, தெலுங்குலயும் கண்டுக்கல... பிரபல பாலிவுட் ஹீரோ மகனுக்கு ஜோடியாகும் ஹீரோயின்

By

சென்னை: நடிகை ஈஷா ரெப்பா, பிரபல ஹீரோவின் மகனுக்கு ஜோடியாக, இந்தி படத்தில் அறிமுகமாகிறார்.

தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் ஈஷா ரெப்பா. அந்தகா முண்டு ஆ தர்வதா என்ற படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார்.

இதைத் தொடர்ந்து, பண்டிபோட்டு, அமி துமி, தர்சகடு, அவே, பிராண்ட் பாபு, அரவிந்தா சமேதா வீர ராகவா படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் அறிமுகம்

தமிழ் அறிமுகம்

'ஓய்' என்ற படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர். கீதன் பிரிட்டோ, சங்கிலி முருகன், நாகி நீடு, நீலிமா ராணி உட்பட பலர் நடித்திருந்த இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.

மீண்டும் தெலுங்கு

மீண்டும் தெலுங்கு

பிரான்சிஸ் மார்க்கஸ் இயக்கி இருந்த இந்தப் படம் போதுமான வரவேற்பை பெறவில்லை. அதனால், மீண்டும் தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஆயிரம் ஜென்மங்கள்

ஆயிரம் ஜென்மங்கள்

இப்போது எழில் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் ஜோடியாக, ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் ரிலீஸுக்கு காத்திருக்கிறது. இதைத் தவிர தமிழில் வாய்ப்பில்லை.

முக்கியத்துவம்

முக்கியத்துவம்

இந்நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தெலுங்கு சினிமாவில் தெலுங்கு நடிகைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறியிருந்தார். இது பரபரப்பானது.

பாலிவுட் அறிமுகம்

பாலிவுட் அறிமுகம்

இந்நிலையில், இவர் பாலிவுட்டில் அறிமுகமாகிறார். பிரபல பாலிவுட் ஹீரோ அணில் கபூர் மகன் ஹர்ஷவர்தன் கபூர் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நடிக்கிறார் ஈஷா. இதை தேசிய விருது பெற்ற இயக்குனர் ராஜ் சிங் சவுத்ரி இயக்குகிறார்.

ராஜஸ்தான் பெண்

ராஜஸ்தான் பெண்

இந்தப் படத்தில் ராஜஸ்தான் பெண்ணாக, ஈஷா ரெப்பா நடிக்கிறார். மும்பையில் நடந்த ஆடிஷனில் இவரது நடிப்பு நன்றாக இருந்ததால், தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: eesha rebba anil kapoor
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X