அம்மா வேஷம் போதும்...! - ஒரு நடிகையின் ஆசை

சமீபத்தில் வந்த மாத்தியோசி படத்தில் கணவனுக்கு துரோகம் செய்யும் மனைவியாக இவர் நடித்தது பெரிதும் 'பேசப்பட்டதாம்'!
அதன் பிறகு ஏராளமான வாய்ப்புகள் வந்துள்ளது. குறிப்பாக ராவணன் படத்தில் இவரை வைத்து ஏகப்பட்ட சீன்கள் எடுத்த மணிரத்னம், வழக்கம் போல பெரும்பகுதியை வெட்டி எறிந்துவிட்டு, ஒரு காட்சியை மட்டும் விட்டு வைத்தாராம். 'இதில் எனக்கு ஏமாற்றம்தான் என்றாலும், நடித்தது மணிரத்னம் படமாச்சே என்ற வகையில் ஏக திருப்தி' என்கிறார் எலிசபெத்.
காதல் சொல்ல வந்தேன் படத்தில் ஹீரோ பாலாஜிக்கு அம்மாவாக நடித்ததில் எக்கச்சக்க நல்ல பெயராம். நிறைய பேர் கூப்பிட்டுப் பாராட்டுவதோடு, நடிக்க வாய்ப்பும் தருகிறார்களாம்.
'இதுவரை சின்னச் சின்ன வேடங்கள் செய்தேன். இப்போது எனது கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களாகத் தருகிறார்கள். நடிக்க வந்த இந்த நான்காண்டுகளில் சொல்லிக் கொள்கிற மாதிரி முன்னேற்றம் இதுதான்', எனும் எலிசபெத்தின் பூர்வீகம் கேரளா என்றாலும், பிறந்தது, வளர்ந்ததெல்லாம் காஞ்சிபுரம்தானாம்.
மதில் மேல் பூனை, அல்லி நகரம், வண்ணத்தேர், கருப்பர் நகரம், திருப்பூர், சிக்குபுக்கு, 365 காதல் கடிதங்கள் என எலிசபெத்தின் கைவசம் உள்ள படங்களின் எண்ணிக்கை டஜனைத் தாண்டுகிறது.
எலிசபெத்துக்கு ஒரு ஆசையாம்... ஒரு படத்திலாவது சிம்புவுக்கு ஜோடியாக நடிக்கணுமாம். காரணம்? "நான் சிம்புவோட தீவிர ரசிகை" என்கிறார்.


Click it and Unblock the Notifications











