ப்பா.. பீச் பேபியாக மாறிய பாபநாசம் பாப்பா.. மோனோகினியில் வெளிநாட்டு தீவில் சும்மா மின்மினியா மின்னுறாரே!
சென்னை: க்ரோஷியா நாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ள பாபநாசம் பட நடிகை எஸ்தர் அனில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் பீச் புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. 23 வயதாகும் இளம் நடிகையான எஸ்தர் அனிலுக்கு இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ள நிலையில், அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார்.
கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் மற்றும் அதன் தொடர்ச்சியான திரிஷ்யம் 2 (2021) ஆகியவற்றில் அனுமோல் ஜார்ஜ் (அனு) என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார்.

ஹலிதா ஷமீம் இயக்கத்தில் வெளியான மின்மினி படத்திற்காக பல ஆண்டுகள் சிறுமியாக இருந்தது முதல் குமரியாக மாறியது வரை நடித்த எஸ்தர் அனிலுக்கு அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை.
பாபநாசம் பாப்பா: மோகன்லால் மலையாளத்தில் நடித்த த்ரிஷ்யம் படத்தில் மட்டுமின்றி அந்த படத்தை தமிழில் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடித்த பாபநாசம் படத்திலும் குழந்தை நட்சத்திரமாக எஸ்தர் அனில் தான் நடித்திருந்தார். சினிமாவில் ஒரு பக்கம் நடித்துக் கொண்டிருந்தாலும், படிப்பிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து பட்டமும் பெற்றுள்ளார். வெளிநாடுகளுக்கு சுற்றுலா செய்வதில் அதிக ஆர்வம் கொண்ட எஸ்தர் அனில் தற்போது க்ரோஷியாவுக்கு சுற்றுலா செய்துள்ள போட்டோக்களை ஷேர் செய்துள்ளார்.
க்ரோஷியாவில் மின்மினி: மும்பையில் கல்லூரி படிப்பை முடித்து விட்டு மாஸ்டர் டிகிரியை லண்டனுக்குச் சென்று படித்து வருவதாக தகவல்கள் உள்ளன. த்ரிஷ்யம் 3 படத்திலும் இவரை சுற்றித்தான் முக்கிய கதை நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், க்ரோஷியா தீவில் மோனோகினி உடையில் இவர் வெளியிட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
மோனோகினியில் எஸ்தர் அனில்: சம்மர் முடிந்த பின்னரும் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து வெளிநாடுகளுக்கு டூர் அடித்து வருவதை நிறுத்தவில்லை. எஸ்தர் அனிலை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வரும் நிலையில், மோனோகினியில் படு கவர்ச்சியாக பீச்சில் விளையாடும் போட்டோக்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை மேலும் கவர்ந்து வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் இவர் ஹீரோயினாகவும் சில படங்களில் கமிட் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











