»   »  நாட்டாமை சரத்குமார் மகளுக்கே இந்த கதின்னா, பிற நடிகைகளுக்கு?

நாட்டாமை சரத்குமார் மகளுக்கே இந்த கதின்னா, பிற நடிகைகளுக்கு?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சென்னை: பிரபல நடிகை மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார், நடிகை வரலட்சுமியிடம் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். என்ன நடக்கிறது?

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து வரும் திருமணம் நிச்சயமாகியுள்ள கேரளாவை சேர்ந்த பிரபல நடிகை தனது முன்னாள் கார் டிரைவரால் மானபங்கப்படுத்தப்பட்டுள்ளார்.

Actress face molestation: What is going on?

அதனால் ஏற்பட்ட பரபரப்பே இன்னும் அடங்கவில்லை. அதற்குள் பிரபல டிவி சேனலின் நிகழ்ச்சி தயாரிப்பு பிரிவு தலைவர் தன்னிடம் அசிங்கமாகப் பேசியதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.

வரலட்சுமியின் தந்தை சரத்குமார் இதே திரையுலகில் பல ஆண்டுகளாக உள்ளார். அரசியலிலும் இருக்கிறார். அப்படி இருந்தும் அவரது மகளுக்கே இந்த நிலை.

எந்தவித பின்னணியும் இல்லாமல் நடிக்க வரும் நடிகைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளதையே இந்த சம்பவம் காட்டுகிறது. பெண்களின் பாதுகாப்புக்காக குரல் கொடுக்கும் நடிகைகளுக்கு முதலில் யார் பாதுகாப்பு கொடுப்பது?

English summary
A popular actress is molested, a leading TV channel's programming head misbehaved with actress Varalakshmi Sarathkumar. Actresses are scared of these incidents.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil