சுந்தரி இப்படி மாறிட்டாளா? பேண்ட் மேல டவுசர்..கேப்ரியல்லா லேட்டஸ்ட் லுக் பார்த்து வாயடைத்த ரசிகர்கள்

சென்னை: 'சுந்தரி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்த நடிகை கேப்ரியல்லா செல்லஸ், தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்களால் இணையத்தை கலக்கி வருகிறார். வழக்கமாக பாரம்பரியமான தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த இவர், இம்முறை முழுக்க மாறுபட்ட மாடர்ன் லுக்கில் தோன்றி அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

அந்த புகைப்படங்களில், பேண்ட் மீது டவுசர் ஸ்டைலில் அணிந்து, ஸ்டைலிஷ் மற்றும் தைரியமான போஸ்களுடன் கேப்ரியல்லா காட்சியளித்துள்ளார். இந்த புதிய ஃபேஷன் லுக் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், "இது வேற லெவல் லுக்", "சுந்தரி இவ்வளவு மாடர்னா?" போன்ற கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகின்றன.

நடிகை கேப்ரில்லா செல்லஸ்: சுந்தரி சீரியலின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும், மகளாக ரசிகர்களின் மனதில் பதிந்த கேப்ரியல்லா செல்லஸ், அந்த கதாபாத்திரத்தின் எளிமையும் உணர்ச்சி காரணமாக பெரிய வரவேற்பை பெற்றார். 2021ம் ஆண்டு தொடங்கிய அந்த சீரியல், தொடர்ந்து இரண்டுபாகமாக ஒளிபரப்பாகி அண்மையில் நிறைவடைந்தாலும், அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் நினைவில் இன்னும் நீங்காத ஒன்றாகவே உள்ளது.

gabriella sellus photos
Photo Credit:

சுந்தரியின் புதிய பரிமாணம்: இதற்கிடையில், தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் கேப்ரியல்லா செல்லஸ் புதிய கட்டத்தை எட்டியுள்ளார். ஒளிப்பதிவாளர் ஆகாஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர், சமீபத்தில் தாயான மகிழ்ச்சியையும் அனுபவித்து வருகிறார். குழந்தை பிறந்த பின் கூட, தனது ஃபிட்னஸ் மற்றும் ஸ்டைலை கவனித்து, தொடர்ந்து போட்டோஷூட்களில் ஈடுபட்டு வரும் இவர், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியல்லா, ஒவ்வொரு முறையும் புதிய லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். தற்போது கேப்ரில்லா செல்லஸ், பேண்ட் மேல டவுசர் போட்டு மாடர்ன் அவதாரம் எடுத்துள்ளார். மேலும் அந்த உடைக்கு ஏற்றபடி அளவாக மேக்கப்பை பயன்படுத்தி உள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் "சுந்தரி"யின் புதிய பரிணாமம் என்று கொண்டாடி வருகின்றனர். அந்த போட்டோவை அவர் பதிவிட்ட சிறிது நேரத்திலேயே லைக்குகள் மலைபோல் குவிந்து வருகின்றன. நடிகை கேப்ரில்லாவை இன்ஸ்டாகிராமில் ஒரு புள்ளி ஒரு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X