என்னை அறைந்த கோழை உண்மையான முஸ்லீம் அல்ல: நடிகை கவ்ஹர் கான்
மும்பை: தன்னை அறைந்த கோழை அன்பை போதிக்கும் இஸ்லாத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது என நடிகை கவ்ஹர் கான் தெரிவித்துள்ளார்.
முஸ்லீமாக இருந்து கொண்டு அரைகுறை ஆடை அணிந்து நடனம் ஆடுவதற்காக பாலிவுட் நடிகை கவ்ஹர் கானை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நடந்த டிவி நிகழ்ச்சி ஷூட்டிங்கில் முகமது அகில் மாலிக்(24) என்பவர் கன்னத்தில் அறைந்தார்.
இந்நிலையில் இது குறித்து கவ்ஹர் கான் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
என் மீது அன்பு வைத்து ஆதரவு அளித்துள்ள என் குடும்பத்தார், நண்பர்கள், ரசிகர்கள், மீடியா, சினிமா துறையினருக்கு நன்றி. நான் காயம் அடைந்தேன். ஆனால் அதனால் நொந்துவிடவில்லை. அதிர்ச்சி அடைந்தேன் ஆனால் இன்னும் உறுதியோடு உள்ளேன். முன்பை விட தற்போது வலிமையாக உணர்கிறேன். அந்த ஆள் அமைதியை போதிக்கும் என் அழகிய மதத்தை சேர்ந்தவராக இருக்க முடியாது.
அவர் நான் ஒரு நடிகை என்பதாலேயே என்னை தாக்கியுள்ளார். இது போன்ற செயல்களை எதிர்த்து நிற்குமாறு நான் பெண்களை கேட்டுக் கொள்கிறேன். அடிவாங்கியதும் நான் ஷூட்டிங்கை ரத்து செய்துவிட்டு செல்லவில்லை.
நான் தாக்கப்பட்டதை அறிந்து கோபம் அடைந்த இந்திய வாலிபர்களின் பிரதிநிதி அல்ல அந்த கோழை என்றார்.


Click it and Unblock the Notifications












