சென்சார் வழங்க கண்டிஷன் போடும் கவுதமி... நீதிமன்றத்துக்கு செல்ல இயக்குனர் முடிவு!

நடிகை கவுதமி மீது நடிகர் வாராகி புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை: சிவா மனசுல புஷ்பா படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் நடிகை கவுதமி தெரிவித்ததாக நடிகர் வாராகி கூறியுள்ளார்.

ஸ்ரீ வாராகி அம்மன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'சிவா மனசுல புஷ்பா'. வாராகி இயக்கி நடித்துள்ள இந்தப்படத்திற்கு, எந்த நேரத்தில் இந்த டைட்டிலை வைத்தாரோ தெரியவில்லை, தற்போது இந்த டைட்டிலே இவருக்கு சிக்கலை இழுத்துக்கொண்டு வந்துவிட்டுள்ளது. டைட்டிலை மாற்றினால் தான் இந்தப்படம் ரிலீசாகும் என்கிற இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.

இந்த டைட்டிலுக்கு வேறு யாரும் உரிமை கொண்டாடாதபோது, தலைப்பை மாற்ற வேண்டும் என சென்சார் போர்டு உத்தரவு போட்டது. இதை எதிர்த்து ரிவைஸிங் கமிட்டிக்கு விண்ணப்பித்தார் வாராகி.

இந்நிலையில், படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என ரிவைசிங் கமிட்டி உறுப்பினர் கவுதமி தெரிவித்ததாக நடிகர் வாராகி கூறியுள்ளார். இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், படத்திற்கு சென்சார் சான்று வாங்க நடிகை கவுதமி கண்டிஷன் போடுவதாக தெரிவித்துள்ளார்.

கவுதமியின் கண்டிஷன்

கவுதமியின் கண்டிஷன்

அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது, "இரண்டு தினங்களுக்கு முன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கவுதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் . இந்தப்படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கவுதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச்சொல்லி வலியுறுத்தினார்.

நிஜ கதாபாத்திரங்கள்

நிஜ கதாபாத்திரங்கள்

நான் கவுதமியிடம் விளக்கம் கேட்டபோது படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறினார். மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினார்

தடையில்லா சான்று கொடுங்கள்

தடையில்லா சான்று கொடுங்கள்

அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் (NOC) வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றும் நிபந்தனை விதித்தார்.

கவுதமி கொடுத்த அதிர்ச்சி

கவுதமி கொடுத்த அதிர்ச்சி

கவுதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கவுதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துபூர்வமான உத்தரவாக கொடுங்கள். நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கவுதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.

அரசியல் காதல் கதை

அரசியல் காதல் கதை

அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன் இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது.. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கவுதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கவுதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது", என வாராகி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர வாராகி முடிவு செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X