மஞ்சள் வெயில் மாலையிலே மெல்ல மெல்ல.. காயத்ரியின் க்யூட் க்ளிக்ஸ்!
சென்னை: தமிழ் சினிமாவில் பரபரப்பான நடிகையாக தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்து வருபவர் நடிகை காயத்ரி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி ,புரியாத புதிர் ,ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் ,துக்ளக் தர்பார் மற்றும் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள மாமனிதன் உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்துள்ளார்.
இப்பொழுது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வரும் காயத்ரி மஞ்சள் வெயில் மாலையில் எடுத்த க்யூட்டான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்

பள்ளி சிறுமியாக
பார்ப்பதற்கு பக்கத்து வீட்டு பெண் போல அனைவரின் மனதுக்கு நெருக்கமாக உள்ளவர் நடிகை காயத்ரி சங்கர். 18 வயசு என்ற படத்தில் பள்ளி சிறுமியாக நடிக்க ஆரம்பித்த இவர் இப்போது தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக மாறியுள்ளார். குறிப்பாக விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் பலவற்றில் இவர் கதாநாயகியாக நடித்துள்ளார் அந்த வகையில் விஜய் சேதுபதி,காயத்ரி கூட்டணி முதல் முறையாக இணைந்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது

விஜய்சேதுபதி, காயத்ரி இடையே கெமிஸ்ட்ரி
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் திரைப்படத்தில் விஜய் சேதுபதி காயத்ரியின் கெமிஸ்ட்ரி மிக நன்றாகவே ஒர்க் அவுட் ஆகி இருக்க இருவரும் தொடர்ந்து பல படங்களில் இன்றுவரை நடித்து வருகின்றனர். அந்த வகையில் ரம்மி, புரியாத புதிர்,ஒரு நல்ல நாள் பாத்து சொல்லுறேன்,சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ்,துக்ளக் தர்பார் மற்றும் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ள மாமனிதன். இதில் மாமனிதன் என்ற படத்தை இயக்குனர் சீனுராமசாமி இயக்கி உள்ளார்

முதல்முறையாக நர்ஸ் வேடத்தில்
மாமனிதன் படத்தை தொடர்ந்து இயக்குனர் சீனுராமசாமி இயக்கத்தில் காயத்ரி, ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக இடி முழக்கம் என்ற படத்தில் நடித்து வருகிறார். முற்றிலும் கிராமத்து கதையில் திரில்லர் கதைகளத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் காயத்ரி முதல்முறையாக நர்ஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.

மஞ்சள் வெயில் க்யூட் க்ளிக்ஸ்
இதுவரை தமிழ் படங்களில் மட்டும் நடித்து வந்த காயத்ரி முதல் முறையாக மலையாளத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் படத்தை இயக்கிய இயக்குனர் ரத்தீஷ் பாலகிருஷ்ணன் போடுவாள் இயக்கத்தில் உருவாகி வரும் நான் தான் கேஸ் கொடு என்ற படத்தில் நடித்து மலையாள சினிமாவிலும் அறிமுகமாகிறார். இவ்வாறு பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் காயத்ரி இப்பொழுது மஞ்சள் வெயில் மாலையிலே எடுத்த அழகிய க்யூட் புகைப்படங்களை இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











