என்னம்மா கழுதை மேய்க்கிற.. பிரபல நடிகையை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை : பெரும்பாலான விஜய்சேதுபதியின் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானவர் நடிகை காயத்ரி சங்கர்.

16 வயசு,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தப்பட்ட இவர் இப்பொழுது அனைவரும் மெச்சும் அளவுக்கு நடிப்பில் பிரமாத படுத்தி வருகிறார்.

ஒத்த செருப்பு படத்தில் வெறும் குரலால் நடித்திருந்த காயத்ரி எப்பொழுது குட்டி குதிரையுடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்க அதைப்பார்த்த பலரும் பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

விஜய்சேதுபதியின் படங்களில்

விஜய்சேதுபதியின் படங்களில்

நடிகர் விஜய் சேதுபதி இன்று இந்த அளவுக்கு உயரத்தில் இருப்பதற்கு மிக முக்கிய படமாக அமைந்தது நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம். இதில் எந்த அளவிற்கு விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டப்பட்டதோ அதே அளவுக்கு இவருக்கு ஜோடியாக நடித்திருந்த காயத்ரியின் வெகுளித்தனமான நடிப்பும் பலராலும் பாராட்டப்பட்டது. அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தமாகி வந்த இவர் பெரும்பாலும் விஜய்சேதுபதியின் படங்களில் காணலாம்.

உலகத்தரத்தில் ஒத்த செருப்பு

உலகத்தரத்தில் ஒத்த செருப்பு

படங்களில் மட்டுமல்லாமல் வெப் சீரிஸ்களிலும் நடித்து வரும் காயத்ரிக்கு அடுத்தடுத்து இரண்டு வெப் சீரிஸ்கள் வெளியாகி இருக்க வெள்ளை ராஜா மற்றும் சமீபத்தில் வெளியான பிங்கர்டிப் ஆகிய வெப் சீரிஸ்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. இயக்குனராக அறிமுகமாகி இப்பொழுது நடிகராக பிரம்மிக்க வைத்து வரும் நடிகர் பார்த்திபன் உலகத்தரத்தில் ஒத்த செருப்பு என்ற படத்தை இயக்கி இருக்க முகத்தை காட்டாமல் கடைசிவரையிலும் குரலிலேயே நடித்த காயத்திற்கு சிறந்த நடிகைக்கான விருதும் வழங்கப்பட்டது.

நேரடியாக ஓடிடியில்

நேரடியாக ஓடிடியில்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,ரம்மி, புரியாத புதிர்,ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்,சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ் என தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களில் இணைந்து நடித்து வரும் காயத்ரி இப்போது மீண்டும் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் கிராமத்து பின்னணி கொண்டு உருவாகி வருகிறது. நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது எனவும் சொல்லப்படுகிறது.

குட்டி குதிரையுடன் க்யூட்டாக

குட்டி குதிரையுடன் க்யூட்டாக

மிகச் சிறந்த நடிப்பு திறமை இருந்தும் இன்றளவும் திரையில் ஜொலிக்க முடியாமல் இருக்கும் காயத்ரி சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இருப்பதில்லை என்றாலும் அவ்வப்போது வந்து சில புகைப்படங்களை பதி விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்தவகையில் இப்பொழுது குட்டி குதிரையுடன் நின்று க்யூட்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை பதிவிட்டதை பார்த்த பலரும் என்ன கழுதை மேய்க்க போய்ட்டீங்களா என பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X