இலைகளுக்கு நடுவே…. வித்தியாசமான உடையில் பிரபல நடிகை !
சென்னை : நடிகை காயத்ரி இப்பொழுது இலைகளுக்கு நடுவே இலைகளால் செய்த டிரெஸை போட்டுக் கொண்டு அசத்தி வருகிறார்.
விஜய் சேதுபதியுடன் இணைந்து மாமனிதன் படத்தில் நடித்துள்ள இவர் இப்பொழுது பிரபுதேவாவுடன் இணைந்து பஹீரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இலைகள் டிசைனில் இருக்கும் வித்தியாசமான டிரெஸ்ஸை அணிந்துகொண்டு கொஞ்சம் கூட வித்தியாசம் தெரியாமல் இலைகளுக்கு நடுவே நின்றுகொண்டு அசத்தலான போட்டோஷூட் நடத்தியுள்ள காயத்ரியை ரசிகர்கள் வர்ணித்து வருகின்றனர்.

பஹீரா
மெர்குரி படத்திற்கு பிறகு பிரபுதேவா நெகட்டிவ் ரோலில் நடித்திருக்கும் பஹீரா படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. இதில் ரம்யா நம்பீசன், சஞ்சிதா ஷெட்டி, அமிரா தஸ்தூர், ஜனனி ஐயர் ஆகியோருடன் இணைந்து காயத்ரியும் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த படத்தை திரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார்.

ஓடிடியில் வெளியாக
விஜய் சேதுபதிக்கு திருப்புமுனையை ஏற்படுத்திய நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்ட காயத்ரி அதைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிக்கும் படங்கள் தனிச் சிறப்பைப் பெற்று வெற்றியும் பெற்று வருகிறது. அந்த வகையில் இப்போது மீண்டும் இயக்குனர் சீனுராமசாமி இயக்கி இருக்கும் மனிதன் படத்திலும் ஜோடியாக நடித்திருக்க இந்தப் படம் ஓடிடியில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது.

த்ரில்லர் வெப் சீரிஸாக
திரைப்படங்கள் மட்டுமல்லாமல் வெப்சீரிஸ்களிலும் கலக்கி வரும் காயத்ரி சென்ற ஆண்டு வெளியான ஃபிங்கர்டிப் வெப்சீரிஸ்ஸில் நடித்திருந்தார் இதில் இவருடன் இணைந்து அக்ஷர ஹாசன், அஸ்வின், சுனைனா ஆகியோர் நடித்திருந்தனர். சூப்பர் த்ரில்லர் வெப் சீரிஸாக வெளியான ஃபிங்கர்டிப் இவருக்கு மற்றுமொரு வெற்றிப் படைப்பாக அமைந்தது.

இலை மாதிரியே டிரெஸ்
சமூக வலைதளங்களில் அவ்வளவாக ஆக்டிவாக இல்லை என்றாலும் அவ்வப்போது சில போட்டோஷூட்டை நடத்தி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கும் நடிகை காயத்ரி இப்பொழுது இலைகளால் செய்தது போலவே வித்தியாசமான உடையில் இலைகளுக்கு நடுவே நின்று கொண்டு வித்தியாசமே தெரியாமல் அட்டகாசமான போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வர இப்போது வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











