சேலை அழகா.. நீ அழகா… காயத்ரியின் சூடேற்றும் போட்டோசூட்!

சென்னை : கேரள உடையில் புதிதாக எடுத்த போட்டோசூட்டை இணையத்தில் பதிவேற்றி உள்ளார் காயத்ரி. கேரளா சேலையில் மலையாளக்குயில் போல மிளிரும் காயத்ரிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

காயத்ரி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகி மட்டும் அல்லாமல், நன்கு தமிழ் பேசும் கதாநாயகிகளில் ஒருவர். கதாபாத்திரத்தை மிக கவனமான முறையில் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். காயத்ரி கடைசியாக அருள்நிதியின் கே-13 படத்தில் நடித்து இருந்தார் .அதற்கு முன் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருப்பார் .

Actress Gayathri post new photoshoot

பெங்களூர் பெண்ணான காயத்ரி 12ஆம் வகுப்பு பயிலும் போது கிடைத்த வாய்ப்பின் மூலம் தற்செயலாக சினிமாத்துறையில் நுழைந்தார் .அந்த படம் என் கிருஷ்ணன் இயக்கத்தில் உருவான 'ஏன் இப்படி மயக்கினாய்' என்பதாகும். அதற்கு பிறகு படிப்பை முடித்த அவர் 18வயசு படத்தில் நடித்து இருந்தார்.

Actress Gayathri post new photoshoot

அந்த படத்திற்கு பிறகு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ,பொன்மாலை பொழுது ,மத்தாப்பு, ரம்மி , ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ,புரியாத புதிர், சீதக்காதி, சித்திரம் பேசுதடி 2, சூப்பர் டீலக்ஸ் , கே-13 ஆகிய படங்களில் நடித்திருப்பார் . அதிகமாக விஜய் சேதுபதி படங்களிலே காயத்ரி நடித்து இருப்பார்.

பார்த்திபன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றி அடைந்த திரைப்படமான ஒத்த செருப்பு திரைப்படத்தில் பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார் அதில் மற்ற கதாபாத்திரங்களின் குரல் மட்டுமே படத்தில் வரும் .அதில் ரசிகர்கள் பார்க்க ஆசை பட்ட பார்த்திபன் மனைவி கதாபாத்திரமான உஷாவின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்தவர் காயத்ரி.

Actress Gayathri post new photoshoot

பிசியாக இருந்தாலும் அவ்வப்போது, சமூக வளைத்தலங்களில் ஆக்டிவ்வாகவே இருந்து வருகிறார். காயத்ரி. அண்மையில் எடுத்த தனது போட்டோசூட் பதிவேற்றி உள்ளார், அதில் கேரளா ஆடையில் காயத்ரி செய்திருக்கும் போட்டோசூட் இணைய ரசிகர்களை பயங்கரமாக கவர்ந்துள்ளது, கேரளா சேலையில் மலையாளக்குயில் போல மிளிரும் காயத்ரிக்கு வாழ்த்துக்கள் வந்து குவிகின்றன.

Actress Gayathri post new photoshoot

காயத்ரி அடுத்ததாக விஜய் சேதுபதி படமான மாமனிதன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதன்பின் உன் காதல் இருந்தால் படத்திலும் நடித்து வருகிறார். காயத்ரி பெரிய படங்களில் நடிக்கவில்லை என்றாலும் தனது சிறந்த நடிப்பை வெளிபடுத்தி வருகிறார்.

காயத்ரி படங்களை தான்டி இரண்டு இணைய தொடர்களிலும் நடித்து இருக்கிறார் .அதில் ஒன்று லோகேஷ் கனகராஜ் கதை எழுதி எஸ்.ஆர். பிரபு தயாரித்து அமேஷானில் வெளிவந்த வெள்ள ராஜா இணைய தொடர். மற்றொன்று ஃபிங்கர்டிப் ஆகும் இந்த தொடர் ஜீ5 யில் வெளியாக உள்ளது. இதில் அக்ஷ்ரா ஹாசன் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் .

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X