அடுத்த லெவலுக்கு மூவ் ஆகும் விஜய் சேதுபதி பட நாயகி... இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சிப் பதிவு!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ளவர் நடிகை காயத்ரி. இவர்கள் இருவரின் கெமிஸ்ட்ரி சிறப்பாக வொர்க் அவுட் ஆகியுள்ளது. இவர்கள் இருவரின் காம்பினேஷனில் சமீபத்தில் வெளியாகியுள்ள படம் மாமனிதன். இந்தப் படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது.

நடிகை காயத்ரி
நடிகை காயத்ரி தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகையாக காணப்படுகிறார். இவரது படங்கள் சிறப்பான விமர்சனங்களை பெற்று இவருக்கு சிறப்பான நடிகை என்ற பெயரையும் பெற்றுத் தந்துள்ளது. தொடர்ந்து நல்ல கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஜய் சேதுபதியுடன் அடுத்தடுத்த படங்கள்
ரேணிகுண்டா பட இயக்குநர் பன்னீர் செல்வத்தின் 18 வயது படத்தின் மூலம் கோலிவுட்டில் இவர் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து தமிழில் நாயகியாகவும் முக்கிய கேரக்டர்களிலும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் படத்தில் இவர் தனது அறிமுகத்தை கொடுத்தார்.

விக்ரம் படத்தில் முக்கிய கேரக்டர்
தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் இணைந்து ரம்மி, புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், துக்ளக் தர்பார் மற்றும் சமீபத்தில் வெளியாகியுள்ள மாமனிதன் ஆகிய படங்களில் இவர் நடித்துள்ளார். தற்போது உலகநாயகன் கமலுடன் இணைந்து விக்ரம் படத்திலும் நடித்து முடித்துள்ளார்.

மலையாளத்தில் அறிமுகம்
இதனிடையே தற்போது தனது கேரியரில் அடுத்த கட்டமாக மலையாளத்திலும் அறிமுகமாக உள்ளார். பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபனுடன் இணைந்து மலையாள படத்தில் நடிக்கவுள்ளார் காயத்ரி. நா தான் கேஸ் கொடு என்ற படத்தில் தற்போது இணைந்துள்ளதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
மலையாளத்தில் தான் அறிமுகமாகவுள்ள இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் அவர் அந்த பதிவில் இணைத்துள்ளார். ரதீஷ் பாலகிருஷ்ணன் பொடுவல் இந்தப் படத்தை எழுதி இயக்கவுள்ளார். படத்தை குஞ்சக்கோ போபன் புரொடக்ஷன்ஸ், உதயா பிக்சர்ஸ் மற்றும் சந்தோஷ் டி குருவிலா இணைந்து தயாரிக்கவுள்ளனர்.


Click it and Unblock the Notifications











