அனுஷ்கா-ஜெனிலியா-சமீராவுக்கு கிடுக்கிப் பிடி!

By Sudha

Genelia and Anushka
நடிகர் சங்கத்தில் உறுப்பினராகக் கூட ஆகாத முன்னணி நடிகைகள்... அனுஷ்கா-ஜெனிலியா-சமீராவுக்கு கிடுக்கிப் பிடி!

பொதுவாக ஒரு மாநில மொழி திரைப்படத்தில் நடிக்க வேண்டுமானால், சம்பந்தப்பட்ட நடிகர் நடிகைகள் அங்குள்ள நடிகர் சங்கத்தில் உறுப்பினராக வேண்டாம். புதுமுக நடிகர் நடிகைகளுக்கும் இதுதான் விதிமுறை.

ஆனால் வந்தாரை வாழவைக்கும் தமிழகமாயிற்றே... இங்கு தமிழ் நடிகர் நடிகைகள் மட்டும் கண்டிப்பாக கட்டணம் செலுத்தி உறுப்பினராகியே தீர வேண்டும். ஆனால் பிற மொழி நடிகைகளிடம் அந்த அளவு கண்டிப்பு காட்டப்படுவதே இல்லை.

அதற்கு உதாரணம் ஜெனிலியா, சமீரா ரெட்டி மற்றும் அனுஷ்கா.

இந்த மூவரும் தமிழில் முதல்நிலை நடிகைகள் எந்த அந்தஸ்துடன் பந்தா காட்டுகிறார்கள். ஆனால் இன்று வரை நடிகர் சங்கத்தில் உறுப்பி்னராகக் கூட பதிவு செய்து கொண்டதில்லை. நியாயமாக இவர்களுக்கு திரையுலகினர் ஒத்துழைப்பு கொடுக்கக் கூடாது. ஆனால் இந்த நடிகைகளின் ஒத்துழைப்பு அபாரமாக இருப்பதாலோ என்னமோ... இதுவரை கண்டுகொள்ளாமல் விடப்பட்டிருந்தனர். அந்த நடிகைகளும் கோடிகளில் புரண்டுகொண்டுள்ளனர்.

இப்போது சடாரென்று விழித்துக் கொண்ட நடிகர் சங்கம் திடீரென்று கெடுபிடி காட்ட ஆரம்பித்துள்ளது.

சங்கத்தில் உறுப்பினர் ஆகாத நடிகைகள் உடனடியாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகவேண்டும். அப்படி ஆகவில்லையென்றால், அந்த நடிகைகளுடன் மற்ற நடிகர்-நடிகைகள் இணைந்து நடிக்க மாட்டார்கள் என்று 'கிடுக்கிப்பிடி' போட்டிருக்கிறது.

இதுதொடர்பாக, நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாத நடிகைகளை வைத்து படம் தயாரித்துக்கொண்டிருக்கும் சில பட அதிபர்களுக்கு, நடிகர் சங்க தலைவர் சரத்குமார், பொதுச்செயலாளர் ராதாரவி ஆகிய இருவரும் கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். சம்பந்தப்பட்ட நடிகைகளை உடனடியாக உறுப்பினர் ஆக சொல்லுங்கள். அல்லது அவர்களுக்கான உறுப்பினர் கட்டணத்தை நீங்களே கட்டிவிடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

மிஞ்சினால் கெஞ்சும் ஜெனிலியா

பாய்ஸ், சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம் ஆகிய படங்களில் நடித்த ஜெனிலியா, இப்போது தனுஷ் ஜோடியாக 'உத்தமபுத்திரன்' படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். டிமிக்கிக் கொடுப்பது, தப்பிப்பது போன்றவற்றுக்கான அர்த்தத்தை இவரிடமிருந்துதான் கற்றுக் கொள்ள வேண்டும். இவர், நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமலேயே பல கோடிகளை தமிழில் சம்பாதித்துவிட்டார்.

இலங்கைத் தமிழருக்காக நடிகர் சங்கம் உண்ணாவிரதம் இருந்தபோது இவர் அதில் கலந்து கொள்ளவில்லை. ஏன் என்று விளக்கம் கேட்ட நடிகர் சங்கத்துக்கு இவர் அனுப்பிய பதில், 'நான் இன்னும் உறுப்பினராகவில்லை' என்பதே.

உடனே இவரை நடிகர் சங்கம் தடைசெய்யவில்லை. உறுப்பினராகும்படி வலியுறுத்தியது. அவரும், விரைவில் ஆகிவிடுவதாகக் கூறினார். ஆனால் இன்றுவரை உறுப்பினராகவில்லை (இப்போதுகூட ஐஃபா விழா விவகாரத்தில் இலங்கை வரை போய் திரும்பி வந்து, ஏகப்பட்ட பொய்களைக் கூறித்தான் தடையிலிருந்து தப்பித்துள்ளார் இந்த ஜெனிலியா!)

இந்த நிலையில், நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர், நேற்று ஜெனிலியா நடித்துக்கொண்டிருந்த 'உத்தமபுத்திரன்' படப்பிடிப்புக்கு திடீரென்று சென்றார்கள். நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாததால், ஜெனிலியா இந்த படத்தில் நடிக்கக்கூடாது. அவருடன் சக நடிகர்-நடிகைகள் யாரும் நடிக்க மாட்டார்கள் என்று கூறி, படப்பிடிப்பை நிறுத்தினார்கள்.

உடனே ஜெனிலியா நடிகர் சங்க நிர்வாகிகளிடம் சமாதானம் பேச ஆரம்பித்தார். உடனடியாக நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகிவிடுவதாக வாக்குறுதி அளித்ததன் பேரில், நடிகர் சங்க நிர்வாகிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்கள் (இன்னும் ஆகவில்லை).

அனுஷ்கா-சமீராரெட்டி

இதேபோல் தென்னிந்திய நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாத நடிகைகள் அனுஷ்கா, சமீராரெட்டி, திவ்யாஸ் பந்தனாஸ், காஜல் அகர்வால், ஹன்சிகா மோத்வானி ஆகியோருக்கும் நடிகர் சங்கம் 'கெடு' விதித்து கடிதம் அனுப்பி இருக்கிறது.

"தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நீங்கள் உறுப்பினர் ஆகாவிட்டால், உங்களுடன் மற்ற நடிகர்-நடிகைகள் நடிக்க மாட்டார்கள்'' என்ற எச்சரிக்கையுடன் அந்த கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஆனால் சங்கத்திலிருந்து பெரிதாக எந்த நடவடிக்கையும் வராது, வந்தாலும் அதைச் சமாளிக்கும் விதம் தங்களுக்குத் தெரியும் என்ற நம்பிக்கை பெரிதாக இருப்பதால், உறுப்பினராகாத நடிகைகளின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே போகிறது!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X