ஜெனிலியா வெறித்தனமான டான்ஸ்... கணவருடன் சண்டை, கியூடெனஸ் ஓவர்லோடட்

சென்னை : "பாய்ஸ்" தமிழ் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார் நடிகை ஜெனிலியா. டைரக்டர் சங்கர் அந்த படத்தை இயக்கி இருப்பார். நடிகர் சித்தார்த் நடிகர் பரத், இசையமைப்பாளர் தமன் இந்த படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார்கள்.

Recommended Video

ஜெனிலியா வெறித்தனமான டான்ஸ்... கணவருடன் சண்டை, கியூடெனஸ் ஓவர்லோடட்

பாய்ஸ் படத்தில் ஹரிணி ஆக நடித்து அனைத்து இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறியிருந்தார். அழகு மட்டுமில்லாமல் நடிப்பு நடனம் என அனைத்திலும் கலக்கியிருப்பார்.

ஜெனிலியா தனது திருமணத்திற்கு பின் நடிப்பதை குறைத்துக் கொண்டாலும் அடிக்கடி சில டிக் டாக் வீடியோஸ் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். அவர் புதிதாக வெளியிட்ட வீடியோவில் தனது கணவருடன் போட்டி போட்டு நடனம் ஆடியுள்ளார்.

ஹாசினி - ரசிகர்களின் கனவுக் காதலி

ஹாசினி - ரசிகர்களின் கனவுக் காதலி

பாய்ஸ் படத்திற்கு பிறகு ஜெனிலியா நடித்து தமிழில் வெளியான படம் சந்தோஷ் சுப்ரமணியம். அந்த படத்தில் ஜெனிலியா மிகவும் க்யூட்டான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். படம் பார்த்து முடித்ததும் இப்படி ஒரு பெண் நமக்கு காதலியாக அமைந்தால் நன்றாக இருக்கும் எனும் எண்ணம் வரும். அதில் அவர் வெளிப்படுத்திய அப்பாவித்தனமான நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசித்தார்கள். அதற்கு கியூடெனஸ் ஓவர்லோடெட் என அன்பாக அழைத்தார்கள்.

தெலுங்கில் முன்னணி கதாநாயகி

தெலுங்கில் முன்னணி கதாநாயகி

ஜெனிலியா தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கில் அதிக படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக சிலகாலம் வலம் வந்தார். ஜூனியர் என்டிஆர் அல்லு அர்ஜுன் ராம் சரண் போன்ற முன்னணி ஹீரோக்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அவர் க்யூட் நடிப்பிற்கு தமிழில் எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அது போலவே தெலுங்கிலும் ஒரு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

மராத்தியில் அறிமுகமாகும் ஜெனிலியா

மராத்தியில் அறிமுகமாகும் ஜெனிலியா

தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் என 4 மொழிகளிலும் பல படங்களில் நடித்து பல வெற்றிப்படங்களை கொடுத்து முதல் முறையாக மராத்தியில் கதாநாயகியாக அறிமுகமாகிறார். இதற்கு முன் 2018 ஆம் ஆண்டு மராத்தி மொழிப் படமான மாலி என்ற படத்தில் கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். அந்த படத்தை அவரே தயாரித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்க ஆட்டம் வெறித்தனம்

எங்க ஆட்டம் வெறித்தனம்

ஜெனிலியா இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புதிய வீடியோவில் கணவருடன் வெறித்தனமான டான்ஸ் ஆடியிருக்கிறார். புஷ்பா படத்தின் பாடலுக்கு ஜெனிலியா கணவர் நிதானமாக ஆட ஆரம்பிக்க உடனே பாடல் மாறுகிறது. அந்த பாடலுக்கு ஜெனிலியா எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் வெறித்தனமாக ஆடுகிறார். அவரைப் பார்த்து அவரது கணவரும் அதே போல ஆட, பார்ப்பதற்கு கியூடெனஸ் ஓவர்லோடு என்று சொல்லத் தோன்றுகிறது. தற்போது இந்த வீடியோ வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X