சினிமாவில் ரீ எண்ட்ரி.. ஆனால் "அவருடன்" நடிக்க ஆசை.. ஜெனிலியா பளீச்!
சென்னை : குறும்பு நடிகை ஜெனிலியா மீண்டும் நடிக்க விரும்புவதாகவும் கணவருடன் நடிக்கவே பெரிதும் ஆசைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
Recommended Video
சங்கர் இயக்கத்தில் 2003ஆம் ஆண்டு வெளிவந்த பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் ஜெனிலியா. அதை தொடர்ந்து, விஜயுடன் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் ஹாசினி என்ற கதாபாத்திரத்தில் குறும்புத்தனம்மிக்க பெண்ணாக நடித்து அசத்தி இருப்பார்.
இந்த படம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. இதையடுத்து, பரத், தனுஷ் பல நடிகர்களுடன் நடித்து தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அவருக்கென்று தனி இடத்தை பெற்றார்.

நடிக்கவில்லை
தமிழில் வெற்றிப்படங்களில் தனது இயல்பான நடிப்வை வெளிப்படுத்தி நடித்துக்கொண்டிருந்த ஜெனிலியா 2012ஆம் ஆண்டு பிரபல ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின் சினிமாவில் நடிப்பதை தவிர்த்துக் கொண்டார் ஜெனிலியா.

மீண்டும் நடிக்க விருப்பம்
ஆனால், ஒரு சில ஹிந்தி படங்களில் மட்டும் கௌரவ தோற்றத்தில் நடித்தார். பல நடிகைகள் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு போனாலும் ரசிகர்களின் மனத்தை விட்டு போவதில், எப்பொழுது மீண்டும் நடிப்பீர்கள் என ரசிகர்கள் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். அதே போல் சமீபத்தில் டிக்டாக் வீடியோவில் ஜெனிலியா பேசியிருந்தார்.

கணவருடன் நடிக்க ஆசை
ஜெனிலியாவிடம், மீண்டும் நடிப்பீர்களா என ரசிகர்கள் கேட்டுள்ளனர் அதற்கு, "சினிமாவில் ரீ எண்ட்ரி கொடுக்க விருப்பம்தான்" என ஜெனிலியா பதிலளித்துள்ளார். நான் மீண்டும் நடிக்க சில ஆண்டுகள் ஆகும். எனக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். ரியானுக்கு 6 வயது, ரஹல் 4 வயதுதான் ஆகிறது. அவர்கள் சிறுவயதினர் என்பதால் இப்போது தன்னால் சினிமாவில் நடிக்க முடியாது என்று கூறினார்.

அவருடன் நடிப்பேன்
அப்படி, மீண்டும் நடிக்க வந்தாலும் தன் கணவர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் மராத்தி மொழி படத்தில் நடிக்கவே பெரிதும் ஆசைப்படுவதாகவும் நடிகை ஜெனிலியா கூறியுள்ளார். மீண்டும் நடிக்கப் போவதாக ஜெனிலியா கூறியதும் மகிழ்ச்சி அடைந்த தமிழ் ரசிகர்கள். மராத்தியில் நடிப்பேன் என்று கூறியதால் தமிழ் ரசிகர்கள் கவலை அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











