இனிமே சிங்கிள் டிஜிட் இல்லை.. அவன் கற்றுக்கொடுத்த வாழ்க்கை பாடம்.. ஜெனிலியா எமோஷனல்!

மும்பை: நடிகை ஜெனிலியா அடுத்தடுத்து விஜய், ஜெயம் ரவி என தமிழில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்களில் நடித்தவர். தெலுங்கு, இந்தி மொழிப்படங்களிலும் சிறப்பான கதைக்களங்களில் நடித்துவந்த இவர் ஒரு கட்டத்தில் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். கடந்த 2012ம் ஆண்டில் இவர்களது திருமணம் நடந்தது.

ரித்தேஷ் மற்றும் ஜெனிலியா தம்பதிக்கு ரியான் மற்றும் ரஹில் என இரு மகன்கள் உள்ளனர். இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள ஜெனிலியா அவ்வப்போது தனது கணவருடனும் குழந்தைகளுடனும் இருக்கும்படியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தனது மூத்த மகனின் பிறந்தநாளை நேற்றைய தினம்கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.

genelia

நடிகை ஜெனிலியா: நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கு, இந்தி மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர்.பாய்ஸ் படம் மூலம் சித்தார்த்திற்கு ஜோடியாக நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்த இவர், தொடர்ந்து 2000 ஆண்டுகளில் விஜய், ஜெயம் ரவி, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து லீட் நாயகியாக வலம் வந்தவர். சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன் என அழுத்தமான கதைக்களங்களில் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை அதிகம். பாலிவுட்டிலும் படங்களில் நடித்துள்ள இவர் பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை காதலித்து வந்தார்.

ஜெனிலியா திருமணம்: இதையடுத்து கடந்த 2012ம் ஆண்டில் ஜெனிலியா மற்றும் ரித்தேஷிற்கு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ரியான் மற்றும் ரஹில் என இரண்டு மகன்கள் உள்ளனர். ஜெனிலியா படங்களில் நடிக்காமல் இருந்தாலும் தற்போதும் ஹீரோயின் மெட்டீரியலாகவே வலம்வந்து கொண்டிருக்கிறார். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக அடுத்தடுத்து போட்டோ சூட் புகைப்படங்கள், குடும்பத்தினர் உடனான வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை பதிவிட்டு வருகிறார். இந்தப்பதிவுகள் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில், ஜெனிலியாவை இன்ஸ்டாகிராமில் 14.4 மில்லியன் பேர் பாலோ செய்து வருகின்றனர்.

genelia

மகன் பிறந்தநாள்: இந்நிலையில் தன்னுடைய மகனின் பிறந்த நாள் குறித்து புதிய பதிவினை ஜெனிலியா வெளியிட்டுள்ளார். அவருடைய மூத்த மகன் ரியாஸிற்கு நேற்றைய தினம் பத்தாவது பிறந்தநாள். இதை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய மகனுடன் தான் இருக்கும்படியான புகைப்படங்களுடன் பகிர்ந்துள்ளார் ஜெனிலியா. இனிமேல் ரியாசின் வயது சிங்கிள் டிஜிட்டில் இருக்காது என்று குறிப்பிட்டுள்ள அவர், அனைவருடனும் அன்புடனும் அரவணைப்புடனும் பழகும் தன்னுடைய மகனிடமிருந்து தான் அதிகமான வாழ்க்கை பாடங்களை கற்றுக் கொண்டுள்ளதாக ஜெனிலியா தெரிவித்துள்ளார்.

genelia

மகன் கற்றுக் கொடுத்த பாடம்: அனைவருடனும் அன்புடனும் எந்த வேலையாக இருந்தாலும் அதை மனஉறுதியுடன் செய்து முடிக்கும் பண்பையும் ரியான் கொண்டுள்ளதாகவும் ஜெனிலியா பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக தானும் சிறப்பான அம்மாவாக இருந்துள்ளதாகவும் தன்னுடைய மகன் தனக்கு இந்த காலகட்டத்தில் கற்றுக் கொடுத்துள்ளதாகவும் அவர் நெகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். புயலை கடப்பது மட்டுமல்ல வாழ்க்கை, மழையை என்ஜாய் செய்து நடனமாடுவதும்தான் என்ற கருத்திற்கேற்ப ரியான் வாழ்ந்து வருவதாகவும் தனக்கும் அவ்வாறு வாழ கற்றுக் கொடுத்துள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X