மீண்டும் கதாநாயகியாக கலக்க வருகிறார் ஜெனிலியா.. ஹீரோ யாரு தெரியுமா !

சென்னை : குழந்தைத்தனமான நடிப்பால் அனைவர் மனதிலும் இடம் பிடித்த ஜெனிலியா மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்க உள்ளார்.

Actress genelia Re etnry in telugu Movie

திரையுலகைப் பொறுத்தவரை சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் என்றுமே நீங்காத இடம் பிடித்திருக்கும் நடிகைகள் ஒரு சிலர் மட்டுமே உண்டு. அப்படி தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் ஜெனிலியா.

தமிழில் பாய்ஸ் படம் மூலமான அறிமுகமான ஜெனிலியா. அதன் பின்னர் விஜய்யுடன் சச்சின், ஜெயம் ரவியுடன் சந்தோஷ் சுப்ரமணியம் என பார்த்து பார்த்து தேர்வு செய்த கதாபாத்திரங்கள் மூலமாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார். மற்ற படங்களை விட சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் இவரின் குழந்தைத்தனமான கதாபாத்திரம் அனைவர் மனதையும் கவர்ந்து இன்று ஜெனிலியா நடித்த அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தை அடுத்து விஜய்யுடன் வேலாயுதம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு நல்ல திரைப்படமாக அமைந்தது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டு இருக்கும் போதே பாலிவுட் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டில் ஆகிவிட்டார்.

Actress genelia Re etnry in telugu Movie

Recommended Video

ஜெனிலியா வெறித்தனமான டான்ஸ்... கணவருடன் சண்டை, கியூடெனஸ் ஓவர்லோடட்

திருமணத்திற்கு பிறகு நடிப்பதிலிருந்து விலகி இருந்த ஜெனிலியா, தனது கணவருடன் ஒரு இந்தி படத்தில் நடித்திருந்தார். மேலும் ,ஒரு மராத்தி படத்திலும் நடித்திருந்தார். தனது கணவர் ரித்தேஷ் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டு வந்தார் ஜெனிலியா.

இந்நிலையில்,ஜெனிலியா தெலுங்கு திரைப்படம் ஒன்றில் கமிட்டாகி உள்ளார். இப்படத்திற்கான பூஜையில் பேசிய ஜெனிலியா ,திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தேன் கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கு மேல் திரைப்படங்களில் நடிக்கவில்லை. இப்போது நடிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். இப்படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X