ஸ்கேட்டிங் கற்க போய் கையை உடைத்துக்கொண்ட ஜெனிலியா.. வைரலாகும் போட்டோ!
மும்பை: நடிகை ஜெனிலியா ஸ்கேட்டிங் கற்க போய் கையை உடைத்துக்கொண்ட போட்டோ வைரலாகி வருகிறது.
பாலிவுட் நடிகையான ஜெனிலியா தமிழில் பாய்ஸ் படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் பிஸியாக இருந்தார் ஜெனிலியா.
தமிழில் கடைசியாக வேலாயுதம் என்ற படத்தில் நடித்தார். 2012ஆம் ஆண்டு ரித்தேஷ் தேஷ்முக் என்பவரை திருமணம் செய்து செட்டிலானார்.

கையில் கட்டு..
அதன்பிறகு, ஒரு சில படங்களில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்து வந்தார். இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜெனிலியா, பொறுப்பான அம்மாவாக இருந்து வருகிறார். இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஜெனிலியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு கட்டுப் போட்டிருக்கும் ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

ஸ்கேட்டிங் கற்க முடிவு
மேலும் அவர் பதிவிட்டிருப்பதாவது, மற்றவர்களுக்கு ஒரு உத்வேகமாக ஸ்கேட்டிங் கற்றுக் கொள்ள முடிவு செய்ததையும், தனது குழந்தைகளுக்கு கம்பெனி கொடுத்ததையும் நினைவு கூர்ந்துள்ளார். தனது பதிவில், அவர் ஸ்கேட்டிங் கற்றுக் கொண்டபின் ஒரு மிகச்சிறந்த வீடியோவை ஷேர் செய்ய நினைத்ததாக குறிப்பிட்டுள்ளார்.

நினைத்தப்படி நடக்கவில்லை
ஆனால் அவர் நினைத்தப்படி நடக்கவில்லை. இருப்பினும், தோல்விகளைப் பற்றி பேசுவது முக்கியம் என்றும் அவற்றிலிருந்து நாம் எவ்வாறு எழுந்திருக்கிறோம் என்றும் உணர்ந்ததால் வீழ்ந்ததை பற்றி பேச முடிவு செய்ததாக கூறியுள்ளார்.
வெற்றி பெறும் காலம் வரை
மேலும் "நீங்கள் பறப்பதற்கு முன்பு சில நேரங்களில் நீங்கள் விழ நேரிடும்." என்ற அவர், வெற்றி பெறும் காலம் வரை தொடர்ந்து முயற்சி செய்வேன் என்றும் கூறியுள்ளார். மேலும் எல்லா பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து தன்னுடைய இன்ஸ்பையரிங் போஸ்ட்டை முடித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











