குட்டை பாவாடையில் க்யூட்டான போஸ்.. ஹாசினி செல்லம் சூப்பர்.. வழியும் ரசிகர்கள் !

மும்பை : திரைப்படங்களில் வரும் ஒரு சில கதாபாத்திரங்கள் எப்பொழுதும் நமது மனதில் நீங்கா இடம் பிடித்து இருப்பதைப்போல சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் ஹாசினி கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிலியா இன்று வரை பலரது மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து கொஞ்சம் தள்ளி இருந்த ஜெனிலியா இப்போது ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற நிலையில் இப்பொழுது மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

இவ்வாறு ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட ஜெனிலியா குட்டைப் பாவாடையில் பழைய சுட்டிப் பெண்ணாக அதே எனர்ஜியுடன் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

எளிதில் மறக்க முடியாத

எளிதில் மறக்க முடியாத

நடிகை ஜெனிலியா சமீப காலமாக தமிழ் திரைப்படங்களில் நடிப்பதில்லை என்றாலும் ரசிகர்களால் அவ்வளவு எளிதில் மறக்க முடியாத நல்ல கதாபாத்திரங்களில் நடித்து இன்று வரை அனைவரும் விரும்பும் சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இளமை துள்ளலுடன்

இளமை துள்ளலுடன்

"துஜே மேரி கஸம்" என்ற திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக இந்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜெனிலியா, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் முற்றிலும் புதுமுகங்களுடன் இளமை துள்ளலுடன் உருவான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.

மனதில் ஆழமாக பதிய

மனதில் ஆழமாக பதிய

ரசிகர்களை முதல் திரைப்படத்திலேயே கவர்ந்த ஜெனிலியா, அதைத் தொடர்ந்து விஜய்யுடன் சச்சின், சந்தோஷ் சுப்ரமணியம் உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அந்த கதாபாத்திரங்களை ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிய வைத்தார்.

ஹாசினி கதாபாத்திரத்தில்

ஹாசினி கதாபாத்திரத்தில்

சந்தோஷ் சுப்ரமணியம் திரைப்படத்தில் இவர் நடித்த ஹாசினி கதாபாத்திரத்தில் துருதுருவென இருக்கும் சுட்டிப் பெண்ணாக நடித்து அனைவரையும் கவர்ந்த நிலையில் இன்று வரை அந்த கதாபாத்திரம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

மீண்டும் காண

மீண்டும் காண

திருமணத்திற்கு பிறகு அவ்வளவாக திரைப்படங்களில் தோன்றாமல் இருந்த ஜெனிலியா ஒரு சில இந்தி மற்றும் மராத்தி திரைப் படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்ற நிலையில், அதே போல தமிழில் இவரை மீண்டும் காண ரசிகர்கள் பலரும் ஆவலுடன் இருக்கும் நிலையில் இப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளமை துள்ளலுடன் இவர் வெளியிட்டுள்ள குட்டைப் பாவாடை போட்டோக்கள் ரசிகர்களின் மனதை தைத்துள்ளது.

புத்துணர்ச்சியுடன்

புத்துணர்ச்சியுடன்

பச்சை நிற குட்டைப் பாவாடையில், பளபளப்பான கால்கள் தெரிய க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் ஜெனிலியா வெளியிட்டுள்ள இந்த புத்துணர்ச்சி மிகுந்த போட்டோக்கள் அனைவரையும் கவர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் பலரும் வழிந்தவாறு வர்ணித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X