ஹீரோயினை தூக்கினீங்களே எப்படி இருந்துச்சு? கேவலமா கேள்வி கேட்ட செய்தியாளர்..கொந்தளித்த நடிகை!
சென்னை: விஜய்சேதுபதி, த்ரிஷா நடித்த 96 திரைப்படத்தின் மூலம் ஜானு என்கிற கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் தான் நடிகை கௌரி கிஷன். இந்த படத்தை தொடர்ந்து, தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் கதாநாயகி, துணை நடிகை போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள அதர்ஸ் திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில், கேவலமான கேள்வி கேட்ட செய்தியாளரை கடுமையாக திட்டி உள்ளார்.
நடிகை கெளரி கிஷன், அபின் ஹரிஹரன் இயக்கத்துல, 'அதர்ஸ்' என்கிற படத்தில் நடித்துள்ளார். மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் இந்த படத்தில், ஆதித்ய மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் பிரதான வேடத்தில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ள இத்திரைப்படம் வரும் 7ந் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பில் படத்தின் கதாநாயகன் ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நடிகை கௌரி கிஷன்: அப்போது பத்திரிகையாளர் ஒருவர், பாடல் காட்சியில் கதாநாயகி கெளரி கிஷனைத் தூக்கிச் சுற்றி இருக்கீங்க, அது எப்படி இருந்துச்சு? அவங்க வெயிட்டா இல்லையா என கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த ஹீரோ ஆதித்யா, சமாளிக்கும் விதமாக ரொம்ப வெயிட்டா இல்லை என்று ஒரே வார்த்தையில் பதில் அளித்தார். இது அருகில் அமர்ந்து இருந்த கௌரி கிஷனை மிகவும் சங்கடத்தில் ஆழ்த்தியது. அந்த நேரத்தில் இதுபற்றி எதுவும் கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகை கெளரி கிஷன் சினிஉலகம் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில், அநாகரீகமாக கேள்வி கேட்ட அந்த செய்தியாளர் இந்த வீடியோவை பார்க்க வேண்டும்.
தகுதியே இல்லாதவர்: நீங்கள் செய்தது மிகப்பெரிய தப்பு மீண்டும், யாரிடமும் இப்படி நடந்து கொள்ளாதீர்கள். மூளையே இல்லாதவர்கள் எப்படி பேசுவார்களோ அப்படி தான் நீங்கள் கேட்ட கேள்வி இருந்தது. இன்னும் நிறைய சொல்வதற்கு இருக்கிறது. அந்த செய்தியாளரின் நம்பரை வாங்கி பேச வேண்டும் என எனக்கு தோன்றியது. அது ஒரு விவாதமாக மாற வேண்டாம் என்று நினைத்து தவிர்த்துவிட்டேன். நான் கூறியதால் மட்டும் அவர் மாறிவிடப் போவதில்லை. அவரின் அந்தக் கேள்வியால் நான் மிகவும் டிசப்பாய்மென்ட் ஆகிவிட்டேன். நான் மட்டுமல்ல, என் ஜெனரேஷனில் இருக்கும் அனைத்து நடிகர்களையும் அது பாதித்திருக்கும் என நான் நினைக்கிறேன். என்னால் மைக்கை எடுத்து அப்பொழுது அவருக்கு பதில் சொல்லி இருக்க முடியும். ஆனால், நான் அதை கடந்து அடுத்த கேள்விக்கு சென்று விட்டேன்.
அடுத்து நடிக்க உள்ள படம்: அநாகரிகமாக கேள்வி கேட்டவர் செய்தியாளர் அந்த வேலைக்கு தகுதியே இல்லாதவர் என்று தான் நான் சொல்லுவேன் அவர் ஏன் இந்த வேலையை பார்க்கிறார் எனக்கு தெரியவில்லை என்று நடிகை கௌரி கிஷன் கடுமையாக அந்த செய்தியாளரை திட்டி பேசி உள்ளார். தற்போது நடிகை கௌரி கிஷன் Love Under Construction மலையாளத் திரைப்படமான என்கிற படத்தில் நடித்து வருகிறார். மேலும், தமிழில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற சூழல் வெப்தொடரின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











