குட்டி பாவாடையில் ஊர் சுற்றும் கௌரி கிஷன்.. எப்படி பார்த்தாலும் க்யூட்டா இருக்காங்களே!
சென்னை : ஒரே ஒரு திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றதோடு ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறியவர் நடிகை கௌரி கிஷன்.
விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருக்கும் மாஸ்டர் திரைப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் வந்து கலக்கி இருக்கும் இவர் மலையாளத்தில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இந்த நிலையில் நண்பர்களுடன் இணைந்து குட்டைப் பாவாடையில் ஊர் சுற்றும் புகைப்படங்களை சமூக வலை தளத்தில் பதிவிட்டு இருக்கும் கௌரியை பலரும் வர்ணித்து வருகின்றனர்.

காதல் திரைப்படமாக
நடிகை திரிஷா இதுவரை எக்கச்சக்கமான திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் 96 இவருக்கு மிகப்பெரிய பெயரையும் புகழையும் பெற்றுத் தந்தது என்று தான் சொல்லவேண்டும். அந்த அளவிற்கு நடிப்புக்கு முக்கியத்துவம் தந்து உணர்வுபூர்வமான காதல் திரைப்படமாக வெளியான 96 தமிழில் மிகப்பெரிய வெற்றிபெற்ற நிலையில் இதில் சிறு வயது திரிஷா கதாபாத்திரத்தில் நடிகை கௌரி கிஷன் நடித்து அசத்தியிருப்பார்.

எக்கச்சக்கமான ஃபேன்ஸ்
சின்னச்சின்ன க்யூட்டான எக்ஸ்பிரஷன்கள் காதலை வெளிபடுத்தும் உணர்வுபூர்வமான நடிப்பு என முதல் திரைப்படத்திலேயே அசத்திய கௌரிக்கு தமிழில் எக்கச்சக்கமான ஃபேன்ஸ் உருவாகி போக இப்பொழுது அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி வரும் இவர் சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார்.

முக்கியமான வேடத்தில்
மலையாளத்தில் கதாநாயகியாக நடித்து வரும் இவர் விரைவில் அனுகிரகீதன் ஆண்டனி என்ற திரைப்படம் வெளியாக இருக்க அதன் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சக்கை போடு போட்டு வருகிறது. மேலும் மாரிசெல்வராஜ் தனுஷ் கூட்டணியில் உருவாகியிருக்கும் கர்ணன் திரைப்படத்தில் ஒரு முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

அழகு தொடை தெரிய
சமூக வலைதளங்களில் கௌரி வெளியிடும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் நாட்கணக்கில் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்போது நண்பர்களுடன் இணைந்து ஊர் சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்க அதில் சிகப்பு நிற குட்டி பாவாடை அணிந்து கொண்டு தொடை அழகு தெரிய செம க்யூட்டாக போஸ் கொடுத்துக் கொண்டிருக்கும் கௌரியின் இந்த ஜாலி ட்ரிப் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இருக்க பலரும் உங்களை திருமணம் செய்து கொள்ள என்ன வழி என கேட்டு வர இந்த புகைப்படங்கள் இப்பொழுது செம வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











