தாவணியில் கலக்கும் குட்டி ஜானு... மனதைப் பறிகொடுத்த ரசிகர்கள்!
சென்னை : 96 திரைப்படத்தின் மூலம் புகழின் உச்சிக்கு சென்ற நடிகை கௌரி கிஷன் அதில் குட்டி ஜானுவாக நடித்து அசத்தி இருப்பார்.
பொங்கலுக்கு பிரமாண்டமாக வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல்களை பெற்றார்.
தமிழில் சிறு சிறு கதாபாத்திரங்களில் செய்து வந்த போதும் மலையாளத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி பல திரைப்படத்தில் நடித்து வரும் கௌரி கிஷன் இப்போது தாவணியில் செம க்யூட்டாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார்.

உண்மையான காதலை
அறிமுக இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்தில் 2018 ல் வெளியான 96 திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. உண்மையான காதலை மிகவும் ஆழமாகவும் அழுத்தம் திருத்தமாகவும் கூறி இருக்க இதில் கதாநாயகனாக விஜய் சேதுபதியும் கதாநாயகியாகவும் திரிஷாவும் நடித்து அனைவரின் இதயங்களையும் உருக வைத்திருப்பார்கள்.

தெலுங்கில் சமந்தா
மென்மையான காதல் திரைப் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு இருந்து வரும் நிலையில் 96 திரைப்படம் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று இந்த திரைப்படம் தெலுங்கில் சமந்தா மற்றும் சர்வானந்த் நடிப்பில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் மிகப்பெரிய வெற்றி பெற்று ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

வருங்கால கனவு கன்னியாக
இந்த நிலையில் 96 திரைப்படத்தில் அனைவராலும் ரசிக்கப்பட்ட குட்டி ஜானுவாக நடித்திருந்த நடிகை கௌரி கிஷன் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். முதல் படத்திலேயே சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி எக்கச்சக்கமான ரசிகர்களை வென்று வருங்கால கனவு கன்னியாக உள்ள இவருக்கு அடுத்த வாய்ப்புகள் தமிழில் வர மலையாளத்தில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.

கர்ணன்
பொங்கலுக்கு கோலாகலமாக வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் கல்லூரி மாணவி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருக்கும் கௌரி கிஷன், அதைத் தொடர்ந்து தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் கர்ணன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மனதை கொள்ளை அடிக்கின்றன
மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்துள்ள அனுகிரகீதன் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் இப்பொழுது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தாவணியில் பார்க்க பார்க்க திகட்டாத அழகு மெழுகு சிலை போல பார்வையாலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை அடிக்கின்றன அட்டகாசமான புகைப்படங்களை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வர ரசிகர்கள் மனதை பறிகொடுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











