16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் உடன் போஸ் கொடுக்கும் நடிகை கௌரி கிஷன்!
சென்னை: இளம் நடிகையாக தென்னிந்திய ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருபவர் நடிகை கௌரி கிஷன்.
96 திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் நடித்து அதிக கவனத்தை ஈர்த்து உள்ளார்.
மலையாளத்தில் கதாநாயகியாக சில படங்களில் நடித்து வரும் கௌரி கிஷன் இப்பொழுது 16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் வைத்துக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அழகிய புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகிறது.

திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில்
இயக்குநர் பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதியின் வித்தியாசமான நடிப்பில் உருவான 96 திரைப்படம் தமிழில் மாபெரும் வெற்றி பெற்றது. அழகிய காதல் கதையை அனைவரும் ரசிக்கும்படி உருவாக்கப்பட்ட இந்த 96 திரைப்படத்தில் ஜானு கதாபாத்திரத்தில் திரிஷா கதாநாயகியாக நடித்திருந்தார் . திரிஷாவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை கௌரி கிஷன்.

கல்லூரி மாணவியாக நடித்து கலக்கினார்
முதல் படத்திலேயே அலட்டிக்கொள்ளாத நடிப்புடன் அறிமுகமான கௌரி கிஷனுக்கு தமிழில் எக்கச்சக்க ரசிகர்கள் உருவாக்கினார் மேலும் இந்த திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்றதால் பலரும் இவரை குட்டி ஜானு எனவே அழைத்து வருகின்றனர். 96 படத்தை தொடர்ந்து அடுத்ததாக விஜய் நடிப்பில் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற மாஸ்டர் படத்தில் கல்லூரி மாணவியாக நடித்து கலக்கினார். மாஸ்டர் திரைப்படமும் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது

படிக்க துடிக்கும் இளம் கிராமத்துப் பெண்
பரியேறும் பெருமாள் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெளியான கர்ணன் திரைப்படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது . இந்த படத்தில் கிராமத்தில் படிக்க துடிக்கும் ஒரு சாதாரண இளம் கிராமத்துப் பெண் கதாபாத்திரத்தில் கௌரி கிஷன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார்
கௌரி கிஷன் ரசிகர்கள் இவரை கதாநாயகியாக காண காத்துக் கொண்டிருக்கும் சூழலில் மலையாளத்தில் இவர் கதாநாயகியாக நடித்த அனுகிரகீதன் ஆண்டனி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து மிக விரைவிலேயே தெலுங்கிலும் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அதன்படி ஸ்ரீதேவி சோபன் பாபு என்ற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
Recommended Video

16 வயதினிலே ஸ்ரீதேவி போல
கௌரி கிஷன் முதல் முறையாக ஓரின பெண் சேர்க்கையாளராக நடித்துள்ள மகிழினி ஆல்பம் பாடல் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான முயற்சிகளை செய்து வரும் நடிகை கௌரி கிஷன் இப்போது 16 வயதினிலே ஸ்ரீதேவி போல சைடு ரோஸ் வைத்துக் கொண்டு இருக்கும் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் ஆகிறது.


Click it and Unblock the Notifications











