கேன்சர் என் வாழ்க்கையை புரட்டி போட்டுவிட்டது… என் மகள் அனுபவித்த வலி.. கௌதமி கண்ணீர் பேட்டி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகைகளில் ஒருவராக இருந்தவர் தான் நடிகை கௌதமி. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ள ஒரு அரசியல் வாதியாகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார். இவர் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, பல போராட்டத்திற்கு பின், தீவிர சிகிச்சைகள் செய்து அதிலிருந்து மீண்டார். தனிப்பெண்ணாக கேன்சரை எதிர்த்து போராடியாக கௌதமி அப்போது வாழ்க்கையில் சந்தித்த வலிகளை பேட்டியில் கூறியுள்ளார்.
யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நான் தனியாக இருந்த போது, என் மகளுக்கு என்னை விட்டால் யாரும் இல்லை என்பதை புரிந்து கொண்டேன். நான் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பேன். அப்போதுதான் ஒரு நாள் எனக்கு கேன்சர் இருக்கலாம் என்று சந்தேகம், வந்தது. அதைத்தொடர்ந்து நானே என்னை சுயபரிசோதனை செய்து கொண்டேன். அப்போது தான் எனக்கு கட்டி இருப்பது தெரியவந்தது.

கேன்சரோடு போராடினேன்: மருத்துவரிடம் சென்று பரிசோதித்த போது அது கேன்சர் கட்டி என்று தெரியவந்தது. அதன் பின், சிகிச்சைகளை எடுக்க தொடங்கினேன். அந்த வாழ்க்கை மிகவும் மோசமானதாகவே இருந்தாலும், என் மகளுக்காக நான் அனைத்தையும் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வாழ்க்கையில் நம்முடன் யார் இருக்கிறார்கள்.. யார் போகிறார்கள் என்பதை பற்றி எல்லாம் கவலைப்பட எனக்கு நேரமில்லை. அந்த நேரத்தில் என் மனதில் ஓடிக் கொண்டிருந்த ஒரே ஒரு விஷயம் என் மகள். நான் இல்லை என்றால் என் மகளுக்கு வேறு யாரும் இருக்கப் போவதில்லை என்பது எனக்கு தெரிந்ததால் நான் கேன்சரை எதிர்த்து போராடினேன்.
மகள் அனுபவித்த வலி: அந்த காலகட்டத்தில் ஒவ்வொரு விஷயத்தையும் என்னுடைய மகளுக்கு நான் சொல்லி சொல்லி தான் வளர்த்தேன். அம்மாவிற்கு ஓரு கட்டி வந்திருக்கிறது அது கேன்சர். அதற்காக அம்மா சிகிச்சை எடுக்க போகிறேன். ஒரு ஆபரேஷன் செய்ய வேண்டும், நான் இதிலிருந்து மீண்டும் வரலாம், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று ஒவ்வொரு காலகட்டத்திலும் நான் அவருக்கு சொல்லிக் கொண்டே இருந்தேன். இந்த நேரத்தில் என் மகள் அனுபவித்த வலி சொல்லமுடியாதவை. சிறுவயதில் இருந்து என் மகள் சந்தித்த பிரச்சனைகளால், அவள் என்னை விட, தைரியசாலியாகவே இருக்கிறாள். நான் அதை பலமுறை உணர்ந்து இருக்கிறேன். காலையில் நீங்கள் முதலில் கண்விழிக்க வேண்டும், அதுதான் உங்களது முதல் குறிக்கோள். நீங்கள் காலையில் விழிக்கும் பொழுது ஆரோக்கியமாக விழித்தீர்கள் என்றால்,.உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் நீங்கள் சமாளித்து விடுவீர்கள் என்று கௌதமி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











