16 முறை கீமோதெரபி செய்துவிட்டேன்... இன்னும் புற்றுநோயுடன் போராடுகிறேன்… மனம் உருகிய நடிகை !

சென்னை : புற்றுநோயுடன் தொடர்ந்து போராடிக் கொண்டு இருக்கிறேன் என பிரபல நடிகை மனம் உருகி பதிவிட்டுள்ளார்.

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

தெலுங்கு, இந்தி,தமிழ் என கிட்டத்தட்ட 26க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

ஹம்சா நந்தினி

ஹம்சா நந்தினி

தெலுங்கு நடிகையான ஹம்சா நந்தினி ஒகடவுடாம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமாகி தனது திரைப்பயணத்தை தொடங்கினார். முதல் திரைப்படம் ஓரளவு பேசப்பட்டதை அடுத்து 786 கைதியின் பிரேமகதா, மோகின போன்ற தெலுங்கு திரைப்படங்களில் நடித்து பிரபலமானார். தெலுங்கு, இந்தி,தமிழ், கன்னடம் என 26க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்

புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்

தமிழில் சமந்தா, நானி நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நான் ஈ திரைப்படத்திலும், ருத்ரமா தேவி திரைப்படத்திலும் நடித்துள்ளார். முன்னணி நடிகர்களில் படங்களில் நடித்து வந்த ஹம்சா நந்தினி சமீபத்தில் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதற்கான தீவிர சிகிச்சை மேற்கொண்டுவருவதாகவும் கூறியிருந்தார்.

உருக்கமான பதிவு

உருக்கமான பதிவு

இந்நிலையில், மொட்டைத்தலையுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், இதுவரை 16 முறை கீமோ சிகிச்சையை செய்திருக்கிறேன் இருப்பினும் புற்று நோயிலிருந்து முழுமையாக விடுபடமுடியவில்லை. புற்றுநோயை எதிர்த்து போராட அடுத்த கட்டத்திற்கு தயாராகிவிட்டேன். அறுவை சிகிச்சை செய்து கொள்ள இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

கலங்கிய ரசிகர்கள்

கலங்கிய ரசிகர்கள்

ஹம்சா நந்தினியின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள், கலங்கிய கண்களுடன் நோயிலிருந்து நிச்சயம் விடுபடுவீர்கள் மனம் தளராமல் இருங்கள், உங்களுக்காக நாங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறோம். புற்று நோயை போராடி வென்று மீண்டும் நடிக்க வருவீர்கள் என்று அவருக்கு ஆறுதல் கூறிவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X