சாக்லேட் மவுஸ் செய்து அசத்திய ஹன்ஸ்... நண்பர்களுடன் கொண்டாட்டமான வீடியோ பதிவு

மும்பை : நடிகை ஹன்சிகா கொரோனா லாக்டவுன் காரணமாக சூட்டிங் எதுவும் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார்.

இந்நிலையில் அவர் ஒரு யூடியூப் சேனலை துவங்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது அவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சமையலில் இறங்கிவிட்டார்.

மாறுபட்ட தோற்றம்

மாறுபட்ட தோற்றம்

நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அவர் கோலிவுட்டின் குட்டி குஷ்பூ என்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார். ஆனால் தன்னுடைய உடலை குறைத்து தற்போது மாறுபட்ட தோற்றத்துடன் காணப்படுகிறார்.

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

குடும்பத்தினருடன் பொழுதுபோக்கு

தற்போது தமிழில் ஒன்றிரண்டு படங்களில் நடித்துவரும் அவர் கொரோனா லாக்டவுன் காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ளார். தன்னுடைய குடும்பத்தினருடன் இனிமையாக பொழுதை கழித்து வருகிறார். இந்நிலையில் அவர் புதிதாக யூடியூப் சேனலை துவக்கி பல்வேறு வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

Recommended Video

என்னோட BIOGRAPHY யார் DIRECT பண்ணனும் | Actress Sona Chat Part-02 | Filmibeat Tamil
சமையல் வீடியோ

சமையல் வீடியோ

சமீபத்தில் தன்னுடைய அண்ணனின் திருமண வீடியோ, தான் காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வீடியோ போன்றவற்றை பதிவிட்டிருநதார். இந்த வீடியோக்கள் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் தற்போது தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து சமையலில் இறங்கியுள்ளார் ஹன்ஸ்.

கொண்டாட்ட வீடியோ

தன்னுடைய நண்பர்கள் விஜால் படேல் மற்றும் நீலு ஆகியோருடன் இணைந்து சாக்லேட் மவுஸ் செய்து அசத்தியுள்ளார். 7 நிமிடங்கள் நீளும் அந்த வீடியோவில் அவர்கள் செய்யும் அட்டகாசம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது. மாஸ்டர் செப் லெவலுக்கு அவர்கள் செய்யும் அலப்பறைகள் ஓவராகவே காணப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X