டெடிபெர கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ... டெடி பொம்மைகளுடன் க்யூட் ஹன்சிகா!

சென்னை: நடிகை ஹன்சிகா கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் மகா.

ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்

தொடர்ந்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் ஹன்சிகா இப்பொழுது டெடி பொம்மைகளுடன் ஆனந்தமாக கட்டிப்பிடித்து விளையாடும் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன.

கொழுக்மொழுக் பேபியாக

கொழுக்மொழுக் பேபியாக

தமிழ் சினிமாவின் கொழுக்மொழுக் பேபியாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி இப்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார். ஸ்லிம்மாக மாறிய பிறகு கவர்ச்சியில் அதகளம் செய்து வரும் ஹன்சிகா சமூக வலைதளங்களில் பிகினி புகைப்படங்களையும் வெளியிட்டு தாறுமாறு செய்து வருகிறார். ஹீரோக்களுடன் இணைந்து டூயட் பாடி நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி இப்பொழுது நயன்தாரா திரிஷா கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட நடிகைகளைப் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

50வது படமாக

50வது படமாக

அந்த வகையில் ஹன்சிகாவின் 50 திரைப்படமாக மகா தற்போது உருவாகியுள்ளது.இயக்குனர் ஜமீல் இயக்கத்தில் முழுக்க முழுக்க திரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இந்த படம் ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகி வருகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மகா திரைப்படம் உருவாகி வரும் இப்படத்தின் மீது கோலிவுட் ரசிகர்கள் மிகப் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். மேலும் இப்படம் ஹன்சிகா மோத்வானி முதல் முறையாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்துள்ளதால் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது. வாலு படத்திற்கு பிறகு ஹன்சிகா மற்றும் சிம்பு காலில் விழுந்து பின் பிரிந்த பிறகு மீண்டும் இணைந்து நடிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் மகா படத்தில் நடிகர் சிம்பு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

ஒரே ஷாட்டில்

ஒரே ஷாட்டில்

ரசிகர்கள் மத்தியில் திரில்லர் படங்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் த்ரில்லரை மையமாக கொண்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் 105 மினிட்ஸ் என்ற படத்தில் ஹன்சிகா மோத்வானி 105 நிமிடங்கள் இடைவிடாமல் ஒரே ஷாட்டில் நடித்து உள்ளார். மேலும் மை நேம் இஸ் ஸ்ருதி என்ற திரைப்படத்திலும் கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் ரோலில் நடித்து வருகிறார். இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது.

கட்டிப்பிடித்து விளையாடும்

கட்டிப்பிடித்து விளையாடும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஹன்சிகா திரைப் படங்கள் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் சூழலில் எப்பொழுது டெடி பொம்மைகளை கட்டிப்பிடித்து விளையாடும் ஹன்சிகாவின் அழகிய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகின்றன. டெடிபெர கட்டி உறங்கிடும் குட்டி மலர் இவ பார்த்தா மனசொரு கட்டிங் அடிக்குது பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X