Hansika: வாழ்க்கையின் சிறப்பான முடிவு.. கையில் பாட்டிலுடன் முதல் திருமண நாளை கொண்டாடிய ஹன்சிகா!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களில் நடித்தவர் நடிகை ஹன்சிகா.
விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் தமிழில் நடித்துவந்த ஹன்சிகாவிற்கு திடீரென மார்க்கெட் பறிபோனது.
இதையடுத்து கடந்த ஆண்டில் சோஹைல் என்பவருடன் ஹன்சிகாவிற்கு பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. முன்னதாக பாரீசில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

நடிகை ஹன்சிகா மோத்வானி: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து வந்தார். விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அரண்மனை உள்ளிட்ட படங்களிலும் நடித்து ரசிகர்களை கவர்ந்து முன்னணி நடிகையாக வலம்வந்த ஹன்சிகா தன்னுடைய உடல் எடையை குறைத்து ஸ்லிம்மானார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது மார்க்கெட் சரிந்தது.
ஹன்சிகா -சோஹைல் திருமணம்: தற்போது சில படங்களில் கமிட்டாகி நடித்து வரும் ஹன்சிகா, கடந்த ஆண்டில் சோஹைல் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். ஜெய்ப்பூரில் மிகவும் பிரம்மாண்டமாக இவர்களது திருமணம் நடந்தது. முன்னதாக பாரீசில் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களது திருமணம் ஹாட்ஸ்டாரில் வெளியானது. இதற்கான அதிகமான பணம் கைமாறியது. இந்நிலையில் தற்போது சில படங்களில் தொடர்ந்து ஹன்சிகா நடித்து வருகிறார்.
முதல் திருமண நாள் கொண்டாட்டம்: இதனிடையே தற்போது தன்னுடைய முதல் திருமண நாள் கொண்டாட்டத்தை தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார் ஹன்சிகா. திருமண நாளையொட்டி ஹன்சிகாவிற்கு சோஹைல் அடுத்தடுத்த சர்ப்பிரைஸ்களை கொடுத்துள்ளார். அவர் தனது கையால் எழுதிய 5 காதல் கடிதங்களை ஹன்சிகாவிற்கு பரிசளித்துள்ளார். மேலும் கேக் வெட்டியும் இவர்களது திருமண நாள் மிகவும் விமரிசையாக கொண்டாடப்பட்டுள்ளது.
பாட்டிலுடன் கொண்டாட்டம்: இதுமட்டுமில்லாமல் Champagne பாட்டிலுடன் தங்களது திருமண நாளை இந்த ஜோடி கொண்டாடியுள்ளது. இதுகுறித்த வீடியோவை தற்போது ஹன்சிகா சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதையொட்டி தனது திருமண வீடியோவையும் ஹன்சிகா பகிர்ந்துள்ளார். மேலும் தன்னுடைய திருமணம் போன்ற சிறந்த முடிவு எதுவும் இல்லை என்றும் லவ் யூ என்றும் சோஹைலுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் ஹன்சிகா. அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்களை பகிர்நது வருகிறார். சமீபத்தில் நீச்சல் உடையில் ஹன்சிகா பகிர்ந்த புகைப்படம் ரசிகர்களை கொண்டாட செய்தது. முன்னதாக கோயிலுக்கு சென்றது உள்ளிட்ட பல புகைப்படங்களையும் பகிர்ந்துள்ள ஹன்சிகா, தனது கணவர் மற்றும் குடும்பத்தினருடன் செலவழித்த அருமையான தருணங்களையும் பகிர்ந்துள்ளார்.


Click it and Unblock the Notifications











