பாரீசில் ஜாலி ட்ரிப்.. பட்டையை கிளப்பும் ஹன்சிகா புகைப்படங்கள்!
சென்னை : இந்திய அளவில் சிறப்பான நடிகையாக இருந்தவர் ஹன்சிகா மோத்வானி. தன்னுடைய க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் இவர்.
Recommended Video
சமீபத்தில் இவரது 50வது படமாக மஹா படம் வெளியானது. இந்தப் படத்தில் இவருடன் சிம்பு நடித்திருந்தார்.
தொடர்ந்து நாயகிக்கு முக்கியத்துவம் தரும் ஸ்கிரிப்ட்களில் ஹன்சிகா தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

நடிகை ஹன்சிகா
நடிகை ஹன்சிகா கோலிவுட்டில் மட்டுமில்லாமல் தென்னிந்திய மொழிப் படங்களிலும் சில பாலிவுட் படங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். கோலிவுட்டில் சின்ன குஷ்பூ என்ற பாராட்டுக்கு உரியவர். இவரது பல படங்கள் இவரது க்யூட் சிரிப்பு மற்றும் நடிப்பால் சிறப்பாக அமைந்தன.

தமிழில் சிறப்பான படங்கள்
தமிழில் தனுஷுடன் மாப்பிள்ளை என்ற படத்தின்மூலம் என்ட்ரி கொடுத்த ஹன்சிகா, நிற்கக்கூட நேரமில்லாமல் தொடர்ந்து விஜய், சூர்யா, கார்த்தி ஜெயம் ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தொடர்ந்து சிறப்பான பல படங்களை கொடுத்துவந்த ஹன்சிகா நடிப்பில் சமீபத்தில் வெளியானது மஹா.

50வது படம் மஹா
மஹா படம் ஹன்சிகாவிற்கு 50வது படமாக அமைந்தது. இந்தப் படத்தில் ஹன்சிகாவுடன் சிம்பு ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்தப் படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வெளியானது. முன்னதாக ஹன்சிகா மற்றும் சிம்பு இருவரும் காதலிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், இவர்களின் பிரேக்கப்பிற்கு பிறகு மஹா படத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

ஹன்சிகா திருமணம்?
இதனிடையே, விரைவில் ஹன்சிகா திருமணம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை அவரது தாயார் மறுத்துள்ளார். அவர் தற்போது படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதனிடையே ஹன்சிகா நடிப்பில் 105 மினிட்ஸ் என்ற படம் உருவாகி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ளது.

விடுமுறைக் கொண்டாட்டம்
இந்நிலையில் தற்போது பாரீஸில் விடுமுறைக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார் ஹன்சிகா. பாரீஸின் முக்கிய இடங்களில் புகைப்படம் எடுத்து அதை தனது இன்ஸ்டாகிராமிலும் பதிவிட்டு வருகிறார். இந்தப் புகைப்படங்கள் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

பாரீஸில் சுற்றுப்பயணம்
பாரீஸின் ஈபிள் டவர், போஞ்சோர் உள்ளிட்ட இடங்களில் சுற்றி வருகிறார் ஹன்சிகா. வெள்ளை நிற கவுனில் இந்தப் புகைப்படங்களை எடுத்துள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வரும் ஹன்சிகா, தற்போது பாரீஸிற்கு சென்று அந்த நகர வீதிகளை அழகாக்கி வருகிறார்.


Click it and Unblock the Notifications











