மயில் போல நடனத்தில் அசால்ட் செய்யும் ஹன்சிகா மோத்வானி... வைரலாகும் வீடியோ!

மும்பை : நடிகை ஹன்சிகா மோத்வானி தனது தோழியுடன் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வாலு படத்திற்கு பிறகு மீண்டும் சிம்புவுடன் இணைந்து மகா படத்தில் நடித்திருக்கும் ஹன்சிகா மோத்வானி அதற்காக உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளார்.

துப்பாக்கி முனை, 100, ஆகிய படங்களுக்குப் பிறகு எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் ரசிகர்களுக்காக சமூகவலைதளங்களில் பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்த ஹன்சிகா இப்போது தோழியுடன் இணைந்து மயில் போல் அழகாக நடனமாடிய வீடியோவை வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அதிருப்தியை ஏற்படுத்தி

அதிருப்தியை ஏற்படுத்தி

தொடர் வெற்றி படங்களின் மூலம் தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஹன்சிகா மோத்வானி இப்பொழுது திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டு உள்ளார். ஹன்சிகாவுக்கு அழகே அவரின் கொழுக்மொழுக் தேகம் தான் என ரசிகர்களால் வர்ணிக்கப்பட்ட நிலையில் இப்பொழுது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும் இந்த லுக்கிலும் பார்க்க நன்றாகத்தான் இருக்கிறது என சிலர் ரசித்து வருகின்றனர்.

50வது திரைப்படம்

50வது திரைப்படம்

இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியிலும் படு பயங்கரம் காட்டிவரும் ஹன்சிகா சமீபத்தில் மாலத்தீவுக்கு சென்ற இடத்தில் பிகினியில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளங்களை ஹாட்டாக்கியதுடன் இனி திரைப்படங்களிலும் கவர்ச்சி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் கிட்டத்தட்ட 50 படங்களில் நடித்து இருக்கிறார். 50வது திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது.

காதல் முறிவு ஏற்பட்டு

காதல் முறிவு ஏற்பட்டு

பெரும் எதிர்பார்ப்புடன் ஹன்சிகா மகா படத்தில் ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக நடிக்க கௌரவ வேடத்தில் சிம்பு இதில் நடித்துள்ளார். ஹாரர் படமாக உருவாகிவரும் மகா படப்பிடிப்பு பணிகள் முற்றிலும் முடிவடைந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகிறது விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாலு படத்திற்கு பிறகு காதல் முறிவு ஏற்பட்டு நீண்டகாலமாக ஜோடி சேராமல் இருந்த ஹன்சிகா சிம்பு இந்த படத்தில் இணைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

பார்க்கப் பார்க்க திகட்டாத

பார்க்கப் பார்க்க திகட்டாத

சரி படங்கள்தான் வெளியாகவில்லை ரசிகர்கள் தன்னை மறந்து விடக்கூடாது என்பதற்காக அடிக்கடி சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடுவதும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ள ஹன்சிகா தோழி ஒருவருடன் இணைந்து ஹிந்தி பாடல் ஒன்றுக்கு மயில் போல அழகாக நடனமாடி பார்க்கப் பார்க்க திகட்டாத வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்க அந்த வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளை குவித்து வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X