மனஅழுத்தம்.. என் இருண்ட காலம்…ரசிகர்களை கலங்க வைத்த ஹன்சிகாவின் பேட்டி!
சென்னை: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழும் நடிகை ஹன்சிகா மோத்வானி சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையை குறித்து திறந்த மனதுடன் பேட்டி அளித்துள்ளார். கடந்த மார்ச் மாதம் சட்டப்படி விவாகரத்து பெற்ற நிலையில், ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கடந்த இரண்டு ஆண்டுகளை "இருண்ட காலம்" என அவர் விவரித்துள்ளார்.
பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக தனது பயணத்தை தொடங்கிய ஹன்சிகா மோத்வானி, பின்னர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். குறிப்பாக மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமான அவர், அதன் பின்னர் 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'எங்கேயும் காதல்', தீயா செய்யனும் குமாரு போன்ற பல வெற்றி படங்களில் நடித்தார். தனது அழகும், நடிப்பும் காரணமாக ரசிகர்கள் மத்தியில் "சின்ன குஷ்பு" எனும் பட்டத்தையும் பெற்றார்.

நடிகை ஹன்சிகா மோத்வானி: தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த ஹன்சிகா, 2022 ஆம் ஆண்டு தனது நீண்டநாள் நண்பரான சோஹேல் கதூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனையில் கோலாகலமாக நடைபெற்றது. ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், பின்னர் பிரிந்து வாழ்ந்ததாகவும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கடந்த மார்ச் மாதம் இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்று பிரிந்தனர். இந்த விவாகரத்திற்காக ஹன்சிகா எந்தவிதமான ஜீவனாம்சமும் கோரவில்லை.
என் இருண்ட காலம்: இந்நிலையில், ஹன்சிகா மோத்வானி அளித்த பேட்டியில், "நான் ஒரு நடிகை என்பதால் மக்கள் என்னைப் பற்றி பேசலாம். ஆனால், எனது தனிப்பட்ட வாழ்க்கையை பாதுகாக்கும் உரிமை எனக்குண்டு. கடந்த இரண்டு ஆண்டுகள் என் வாழ்க்கையில் மிகவும் கடினமான, இருண்ட காலமாக இருந்தது. அந்த நேரத்தில் தனது தாய் மற்றும் சகோதரர் தான் தன்னுடன் இருந்து மனஅழுத்தத்திலிருந்து மீள உதவினார்கள். மேலும், "தவறான உறவில் இருப்பது ஒரு துன்பம். அதிலிருந்து வெளியேறுவது நல்லது. இப்போது நான் அந்த வேதனையிலிருந்து மீண்டு, அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை தைரியமாக எதிர்கொண்டு மீண்டு வந்த ஹன்சிகாவின் இந்த வெளிப்படையான பேட்டி, பலரிடமும் கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications