வத்தலும் தொத்தலுமான ஹன்சிகா.. அந்தரத்தில் தொங்கி வெறித்தனமான ஒர்க்அவுட் கடுப்பான ரசிகாஸ்!
சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அழகாக கொழு கொழுவென இருந்த ஹன்சிகாவை ரசிகர்கள் சின்ன குஷ்பூ என்று செல்லமாக அழைத்து வந்தனர். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடித்து வரும் இவர், ஜிம்மில் தலைகீழாக தொங்கி வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த போட்டோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் நடித்தார். அதன்பின் தெலுங்கில், தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடித்தார். தெலுங்கில் அவருக்கு சொல்லிக்கொள்ளும்படி படவாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து, தமிழில் அவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

ஹன்சிகா மோத்வானி: அதேசமயம் ஹன்சிகா மோத்வானியின் அழகு தமிழ் ரசிகர்களையும், திரையுலகினரையும் கவர்ந்துவிட்டன. அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதன்படி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி, சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.

கைவசம் உள்ள படம்: ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறைந்ததால், தனது சிறுவயது நண்பர் சோஹெல் கத்தூரியா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, கடைசியாக மகா படத்தில் நடித்தார். அந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்திருந்தும் படம் ஒன்னுக்கும் உதவாமல் போனது. தற்போது இவரிடம் மை நேம் இஸ் ஸ்ருதி, ரௌடி பேபி உள்ளிட்ட படங்கள் கைவசம் உள்ளன.

வெறித்தனமான ஒர்க்அவுட்: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்கள், வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், ஜிம்மில் தலைகீழாக தொங்கிய படி வெறித்தனமாக ஒர்க்அவுட் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள். ஏற்கனவே வத்தலும் தொத்தலுமாகத்தான் இருக்குறீங்க எதுக்கு இதெல்லாம் என்றும், ஹன்சிகாவின் அழகே கொழு கொழுதான் அதை விட்டுவிட்டு எதுக்கு ஒர்க் அவுட் என்று திட்டி தீர்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











