ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டேனா? இப்படி எழுதுபவர்களுக்கு கொஞ்சம் கூட அறிவு இல்லை.. டென்ஷனான ஹன்சிகா!

சென்னை : நடிகை ஹன்சிகா மோத்வானி மற்றும் சோஹேலின் திருமண வீடியோவின் இரண்டாவது எபிசோடு வெளியாகி உள்ளது. அதில், ஹார்மோன் ஊசி போட்டுக்கொண்டேன் என்று பரவிய வதந்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானியின் திருமணம் ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகால பழமை வாய்ந்த அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

ஹன்சிகாவின் திருமண ஒளிபரப்பு உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பெற்றிருந்ததால், திருமணம் குறித்த ஒரு சில வீடியோக்கள் மட்டுமே வெளியானது.

ஹன்சிகா மோத்வானி திருமணம்

ஹன்சிகா மோத்வானி திருமணம்

நடிகை ஹன்சிகா மோத்வானியின் திருமண வீடியோவின் முதல் எபிசோடு டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் லவ் ஷாதி டிராமா என்ற பெயரில் வெளியானது. இதில், ஹன்சிகா திருமண ஏற்பாடு குறித்தும், சோஹேலின் முதல் திருமணம் முறிந்த போனதற்கு ஹன்சிகா தான் காரணம் என பல பத்திரிக்கைகளில் வெளிவந்தது குறித்தும் கண் கலங்கி பேசியிருந்தார்.

லவ் ஷாதி டிராமா

லவ் ஷாதி டிராமா

இதையடுத்து, இரண்டாவது எபிசோடு வெள்ளிக்கிழமையான நேற்று வெளியானது. அதில், இந்த உலகத்தில் இருக்கும் அனைவருக்குமே நிச்சயமா ஒரு கடந்த காலம் இருக்கும். ஆனால், அந்த கடந்த கால வாழ்க்கையை பார்க்கக்கூடாது. சோஹேலின் கடந்த காலம் என்ன என்று எனக்கு தெரியும் அவரை நான் மனதார ஏற்றுக்கொண்டேன்.

ஹார்மோன் ஊசி போட்டேனா?

ஹார்மோன் ஊசி போட்டேனா?

ஆனால், என்னைப்பற்றி தப்பு தப்பாக எழுதுபவர்களுக்கு உண்மை என்ன என்று தெரியாது, செலபிரிட்டியா இருந்ததற்கு நான் கொடுத்த விலை. என்னுடைய 21 வது வயதிலேயே பெரிய பெண்மாதிரி தெரிவதற்காக என் அம்மா எனக்கு ஹார்மோன் ஊசி போட்டதாக அம்மா பற்றி தவறாக எழுதினார்கள். அப்போது உண்மையில் என் இதயமே உடைந்து விட்டது, அந்த வயதிலேயே வந்த அனைத்து விமர்சனங்களையும் நான் தைரியமாக எதிர்கொண்டேன்.

கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா?

கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா?

ஹார்மோன் ஊசி போட்டு இருந்தால், இந்நேரம் நான் டாட்டா பிர்லாவை விட பணக்காரப் பெண்ணாக இருந்து இருப்பேன். இதை எழுதுபவர்களுக்கு கொஞ்சம் கூட பொது அறிவு இல்லையா? நாங்கள் பஞ்சாபிகள், எங்கள் குழந்தைகள் 12,16 வயதிலேயே பெரியவர்களாக வளர்ந்து விடுவார்கள் இது எல்லாம் தெரியாமல் கண்டதை எழுதுகிறார்கள். இப்போ பிரச்சனைகளை எதிர்கொள்ளும் தைரியம் வந்துள்ளது. இதனால், யாருக்கு என்ன எழுதனும்னு தோணுதோ அதை எழுதட்டும் எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என்று அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X