Hansika Motwani: மினு மினு உடையில்.. காருக்குள் செல்ஃபி.. ஹன்சிகா மோத்வானியின் க்யூட் போட்டோஸ்!

சென்னை: தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை ஹன்சிகா மோத்வானி, சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பவர். அவ்வப்போது தனது புகைப்படங்கள், வீடியோக்கள், தனிப்பட்ட தருணங்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் பதிவிட்டுள்ள போட்டோ பலரை கவர்ந்துள்ளது.

நடிகை ஹன்சிகா மோத்வானி, தமிழில் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்த படத்தை தொடர்ந்து தமிழில் ஒரு கல் ஒரு கண்ணடி, எங்கேயும் காதல், தீய வேலை செய்யனும் குமாரு, சேட்டை, வேலாயுதம், வாலு என அடுத்தடுத்து படங்களில் நடித்து வந்தார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிப்படத்திலும் பிஸியாக நடித்து வந்த ஹன்சிகா மோத்வானி, 2022 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் நண்பர் சோஹேல் கதூரியாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பிரபலங்களே வியந்து பார்க்கும் அளவில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்றது.

Hansika Motwani instagram
Photo Credit:

நடிகை ஹன்சிகா மோத்வானி: தொழிலதிபரான சோஹேல் கதூரியா, ஹன்சிகாவின் தோழியின் கணவர் என்றும், தோழியை விவாகரத்து செய்துவிட்டுத்தான், ஹன்சிகாவை திருமணம் செய்து கொண்டார் என்றும், சோஹேல் கதூரியாவின் முதல் திருமணம் விவாகரத்தில் முடிய ஹன்சிகா தான் காரணம் என பல தகவல்கள் இணையத்தில் பரவியது. ஆனால், இது எல்லாம் உண்மை இல்லை எல்லாமே வதந்தி தான் என ஹன்சிகா டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் மனம் உடைந்து பேசி இருந்தார். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, ஆனால், அந்த படங்கள் எல்லாம் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை.

ப்ளூ கலரில் சூப்பர்: அண்மையில், ஹன்சிகா தனது காதல் கணவர் சோஹேல் கதூரியாவை விட்டு பிரிந்துவிட்டதாகவும், திருமணமான சில மாதங்களிலேயே இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாகவும் செய்தி வெளியானது. இந்த வதந்திகள் எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் இருந்த நடிகை ஹன்சிகா, நண்பர்களுடன் ஜாலியாக பாலித்தீவில் இருக்கும் வீடியோவை பதிவிட்டு இருந்தார். தற்போது ஹன்சிகா மோத்வானி, நீல நிறத்தில் கண்ணை கவரும் அழகிய உடை அணிந்து, காருக்குள் அமர்ந்தபடி செஃல்பி போட்டோவை எடுத்துள்ளார். இயல்பான மேக்கப், சிரிப்புடன் கூடிய முகபாவனைகள், ஸ்டைலிஷ் லுக் ஆகியவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளன. குறிப்பாக, அவரின் எளிமையான மற்றும் க்ளாசியான தோற்றம் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது. இந்த போட்டோவை அவர்,இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நிலையில், ரசிகர்கள் "அழகின் அர்த்தம்", "ப்ளூ கலரில் சூப்பர்" போன்ற கருத்துகளை கமெண்ட் செய்து வருகிறார்கள். சிலர் ஹார்ட், ஃபயர் எமோஜிகளுடன் தங்களின் காதலையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X