மார்கெட் இல்லைனாலும் ஒரு மார்க்கமாத்தான் இருக்கீங்க.. ஹன்சிகா மோத்வானியின் கலக்கல் போட்டோஸ்!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி என அடுத்தடுத்த மொழிகளில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து டாப் நடிகை என பெயர் எடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா. இவர் தமிழ் சினிமாவிற்கு வரும் போது கொழு கொழுவென இருந்ததால், ரசிகர்கள் சின்ன குஷ்பூ அழைத்து வந்தனர். ஆனால் இப்போது வொர்க் கவுட் செய்து வத்தலாக மாறி இருக்கிறார்.தற்போது இவர் பாவாடை தாவணியில் அட்டகாசமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். இது இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது
மும்பையில் பிறந்து வளர்ந்த ஹன்சிகா மோத்வானி. குழந்தை நட்சத்திரமாக ஹிந்தி படங்களில் நடித்து வந்தார்.அதைத்தொடர்ந்து, தெலுங்கில், தேசமுதுரு, காந்த்ரி, மஸ்கா உள்ளிட்ட படங்களில் லீட் ரோல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அவை அனைத்தும் ஹன்சிகாவிற்கு ஒரு நல்ல அடையாளத்தை பெற்றுத்தரவில்லை.இதையடுத்து, தமிழில் அவர் தனுஷ் நடித்த மாப்பிள்ளை படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் படுதோல்வியை சந்தித்தது.

ஹன்சிகா மோத்வானி: அதேசமயம் ஹன்சிகா மோத்வானியின் அழகு தமிழ் ரசிகர்களையும், திரையுலனரையும் கவர்ந்ததால், அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தன. அதன்படி அடுத்ததாக பிரபுதேவா இயக்கத்தில் எங்கேயும் காதல் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படம் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றதால், அதன் பின் தான் உதயநிதி ஸ்டாலுடன் ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் நடித்தார். அந்த படம் ஹன்சிகாவிற்கு நல்ல ஓபனிங்கை கொடுத்தது. அதன்பின் சேட்டை, பிரியாணி, சிங்கம் 2, மான் கராத்தே, மீகாமன், புலி, ஆம்பள, வாலு உள்ளிட்ட படங்களில் வரிசையாக நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார்.
திருமணம்: வாலு படத்தில் சிம்புவுடன் நடித்த போது அவரை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது. சிம்பு யாருடன் சேர்ந்து நடித்தாலும், அந்த கதாநாயகிகள் சந்திக்கும் இயல்பான பிரச்சனை தான் இது. இதையடுத்து ஹன்சிகாவிற்கு பட வாய்ப்புகள் குறைந்ததால், திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த ஹன்சிகா தனது சிறுவயது நண்பர் சோஹெல் கத்தூரியாவை திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வரும் ஹன்சிகா, கடைசியாக கார்டியன் படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படம் ஒன்னுக்கும் உதவாமல் போனது.
என்ன அழகுடா: தற்போது ஹன்சிகா மோத்வானி, ரௌடி பேபி,மேன்,காந்தாரி என்ற படத்திலும் நாஷா என்ற வெப் தொடரிலும் நடித்து வருகிறார். இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படும் ஹன்சிகா மோத்வானி, தொடர்ந்து அடுத்தடுத்த போட்டோஷுட்கள், வீடியோக்களை அப்லோடு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் கிராமத்து பெண் போல பாவாடை தாவணியில் இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவை ரசிகர்கள் ரசித்துப் பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











