நடுரோட்டில் கணவருக்கு கட்டிப்பிடி வைத்தியம்.. ஹன்சிகா மோத்வானியின் வேறலெவல் போட்டோஸ்!

சென்னை: நடிகை ஹன்சிகா மோத்வானி தனது காதல் கணவருடன் கிறிஸ்துமஸ் பண்டிகையை செம ஜாலியாக கொண்டாடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா மோத்வானி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். 2007ம் ஆண்டு தெலுங்கில் வெளியான தேசமுருடு என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.

அந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் ஹன்சிகா மோத்வானி சும்மா கொழு கொழுவென இருந்ததால், தமிழ் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நடிகையாக மாறினார்.

actress hansika motwani latest instagram photos

நடிகை ஹன்சிகா மோத்வானி: இந்த படத்தைத் தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக அறிமுகமான ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நகைச்சுவை திரைப்படமான இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. ஹன்சிகாவின் மார்கெட்டை எங்கேயோ கொண்டு சென்றது. இதையடுத்து, சிம்பு, சித்தார்த், ஜெயம் ரவி உள்ளிட்டவர்களின் படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தையே உருவாக்கினார்.

சிம்புவுடன் காதல் கிசுகிசு: சிம்புவுடன் வாலு படத்தில் சேர்ந்து நடித்த போது இருவரும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கோலிவுட்டில் கிசுகிசு பரவியது. வழக்கமாக சிம்பு யாருடன் இணைந்து நடித்தாலும் இதே கிசுகிசுத்தான் வரும் என்பதால் ரசிகர்கள் கண்டு கொள்ளவில்லை.

காதல் திருமணம்: கடந்த டிசம்பர் மாதம் முன் தனது நீண்ட நாள் நண்பரும், தொழில் அதிபருமான சோஹேல் கதுரியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் ராஜஸ்தானில் புகழ்பெற்ற 450 ஆண்டுகள் பழமையான ஜெய்ப்பூர் கோட்டை மற்றும் அரண்மனையில் மிகவும் ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடந்தது. தோழியின் கணவருடன் நெருங்கி பழகி கடைசியில் அவரையை திருமணம் செய்து தோழிக்கு துரோகம் செய்துவிட்டார் என்று ஹன்சிகா குறித்து பல செய்தி ஊடகத்தில் பரவியது. ஆனால், இதையெல்லாம் கண்டுகொள்ளாத ஹன்சிகா மோத்வானி, திருமணத்திற்கு பிறகும் பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார் ஹன்சிகா. என் பெயர் ஸ்ருதி,105 நிமிடங்கள்,ரவுடி பேபி, கார்டியன், மேன் போன்ற படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த படங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவர உள்ளன.

நடுரோட்டில் ரொமான்ஸ்: இந்நிலையில் நடிகை ஹன்சிகா மோத்வானி தனது காதல் கணவர் சோஹேல் கதுரியாவுடன் சுவிட்சர்லாந்தில் ஜாலியாக கிறிஸ்துமஸ் பாண்டியை கொண்டாடி உள்ளார். நடுரோட்டில் கணவரை கட்டிப்பிடித்துக்கொண்டு இருக்கும் போட்டோவை ஷேர் செய்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இன்ஸ்டாகிராமில் ஆறு மில்லியன் பாலோவர்களை வைத்து இருக்கும் ஹன்சிகா மோத்வானிக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

படுக்கை அறையில் ரொமான்ஸ்: அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இருவருக்கும் கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் நடந்தது. தற்போது இருவருமே படங்களில் பிஸியாக இருப்பதால் இருவரும் சேர்ந்து இருக்கும் நேரம் மிகவும் குறைவு தான். இருந்தாலும் அவர்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை ரொமான்டிக்காக செலவு செய்கிறார்கள். அந்த வகையில், நேற்று இருவரும் கட்டி அணைப்பது, முத்தம் கொடுப்பது என செம ரொமான்ஸாக இருந்த போட்டோவை ஷேர் செய்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த போட்டோவைப்பார்த்த ரசிகர்கள் இப்படிக்கூட கிறிஸ்துமஸ் வாழ்த்து சொல்லலாமா என கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X