Hansika Motwani: வெறும் எலும்பு தான் தெரியுது.. ஹன்சிகாவின் லேட்டஸ்ட் போட்டோ.. புலம்பும் பேன்ஸ்!

சென்னை: கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்ட ஹன்சிகா மோத்வானி எலும்பும் தோலுமாக இருக்கும் போட்டோவைப் பார்த்து ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக, அறிமுகமான ஹன்சிகா, தெலுங்கு திரைப்படம் மூலம் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். பார்பதற்கே பப்லியாக, ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட ஹன்சிகா முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம் பேர் விருதை பெற்றார்.

actress hansika motwani latest photoshoot trending on social media

ஹன்சிகா மோத்வானி: இந்தி, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்த ஹன்சிகா, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக மாப்பிள்ளை படத்தில் நடித்தார். ரசிகர்களால் குட்டி குஷ்பு என அழைக்கப்பட்ட ஹன்சிகா இப்படத்தின் வெற்றிக்கு பின் உதயநிதி ஸ்டாலின் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி படத்தின் வெற்றிக்கு பின் பிரபலம் ஆனார்.

காதல் திருமணம்: தனுஷ்,ஜெயம் ரவி, சிம்பு என முன்னணி நடிகர்களுடன் போட்டி போட்டு நடித்து வந்த ஹன்சிகாவுக்கு திடீரென பட வாய்ப்புகள் குறைந்தது. இந்த நேரத்தை சரியாக பயன்படுத்திக் கொண்ட ஹன்சிகா, தனது நீண்ட நாள் நண்பரான சோஹைல் கதூரியா என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

அடுத்தடுத்த படங்கள்: திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா, பாட்னர், ரௌடி பேபி, 105 மினிஸ்ட், மை நேம் இஸ் ஸ்ருதி, மேன் என தமிழில் 5 படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் ஒவ்வொன்றாக அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

வெறும் எலும்பு தான் தெரியுது: கடந்த வாரம் தனது 32வது பிறந்தநாளை கொண்டாட வெளிநாடு சென்ற ஹன்சிகா வெள்ளை நிற உடையில், கையில் மது கோப்பையுடன், கணவருடன் மிக ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய போட்டோஸ்களை வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. தற்போது ,கணவருடன் இஸ்தான்புல்லில் இருக்கும் ஹன்சிகா விதவிதமான போட்டோவை அப்லோடு செய்து உள்ளார். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், வெறும் எலும்பு தான் தெரியுது என்றும், இனி பழைய ஹன்சிகாவை பார்க்கவே முடியாத என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X