அனைவரிடத்திலும் அன்பை பரப்புவோம்… அன்பால் நெகிழவைத்த ஹன்சிகா மோத்வானி !
சென்னை : தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, தன்னுடைய கொழு கொழு அழகால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
இந்த முறை ரவுண்ட் கட்டி அடிக்கும் முடிவில் இருக்கும் ஹன்சிகா, 9 புரொஜெக்ட்டுகளில் கமிட்டாகியுள்ளாராம்.
இந்த புத்தாண்டில் அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை என கூறியுள்ளார்.

ஹன்சிகா
பாலிவுட் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக இருந்த இவர், 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் ஜோடியாக தேசமுருடு என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார்.இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, ஒரு கல் ஒரு கண்ணாடி, சிங்கம் 2, மான் கராத்தே, பிரியாணி உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

9 படங்களில்
ஹன்சிகாவுக்கு கடந்த ஆண்டு சிறப்பான ஆண்டாக அமையவில்லை. ஆனால், 2022 ம் புத்தாண்டில் பார்ட்னர், ரவுடி பேபி, மை நேம் இஸ் ஸ்ருதி, 105 மினிட்ஸ், மஹா, இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஒரு படத்திலும், ஹாட்ஸ்டார் ஒரிஜினல்ஸ் மற்றும் வாலு புகழ் இயக்குனர் விஜய் சந்தருடன் ஒரு படத்திலும், R கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்திலும் என 9 திரைப்படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சாதனை படைத்த ஆல்பம்
இந்நிலையில், சுனிதி சௌஹானால் இசைக்கப்பட்ட பஞ்சாபி சுயாதீன ஆல்பமான ஸ்ரீம் பாகல் வெளியான 3 நாட்களுக்குள் கிட்டத்தட்ட 12 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனைபடைத்துள்ளது. இதனால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் ஹன்சிகா, ரசிகர்களுக்கு புத்தாண்டு வாழ்த்து செய்தியையும் அனுப்பியுள்ளார்.

சவாலான ஆண்டு
கடந்த ஆண்டு அனைவருக்கும் ஒரு பெரிய சவாலான ஆண்டாகவே இருந்தது. திரையுலகம், தாங்க முடியாத பல கடினமான சோதனைகளை சந்தித்தது. ஆனால் இந்த 2022 புத்தாண்டின் போது அனைவரின் வாழ்க்கை இயல்பு நிலைக்குத் திரும்புவது, இருட்டை விலக்கி தூரத்தில் தெரியும் வெளிச்சம் போல், பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

கனவுகள் நனவாக வேண்டும்
இந்த ஆண்டு அனைவரின் கனவுகளும் இலக்குகளும் நனவாக வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், வெற்றிகரமாகவும் இருங்கள், மேலும் நேர்மறை எண்ணத்தை பரப்ப மறக்காதீர்கள், அனைவரிடத்திலும் அன்பை பரப்ப வேண்டியது காலத்தின் தேவை என ஹன்சிகா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











