வா வா என் வெளிச்ச பூவே வா.. ஹன்சிகா மோத்வானியின் டிராகன் போட்டோ ஷூட் !

மும்பை : இருட்டில் பளீரென தெரியும் முகம், டிராகன் போட்டோஷூட் செய்து அசத்தி வரும் நடிகை ஹன்சிகா மோத்வானி.

லாக்டவுனில் பல்வேறு விளம்பரங்களுக்கு பிஸியாக போட்டோஷூட் நடத்தி வரும் ஹன்சிகா மோத்வானி, அதை தற்பொழுது சமூக வலைதளங்களில் தவறாமல் பகிர்ந்து வருகிறார்.

அந்த வகையில் மேலாடை அணியாத போட்டோ ஷூட் ஒன்று நடத்தி அந்த புகைப்படங்களில் பல்வேறு க்யூட்டான எக்ஸ்பிரஷனில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வந்த ஹன்சிகா மோத்வானி தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில் இருட்டு அறையில் நின்று கொண்டு வெளியிட்டுள்ள டிராகன் போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

க்யூட்டான நடிப்பு

க்யூட்டான நடிப்பு

தனித்துவமான திரைக்கதைகளை தேர்தெடுத்து தனது க்யூட்டான நடிப்பின் மூலம் பல்வேறு திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை தொடர்ந்து மகிழ்ச்சி படுத்தி வரும் ஹன்சிகா மோத்வானி, தற்பொழுது பல்வேறு போட்டோ ஷூட்களில் வித விதமான கோணங்களில் எடுத்து அதை சமூக வலைதளங்களில் தாராளமாகப் பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.

நேர்த்தியாக உருவாக்கி

நேர்த்தியாக உருவாக்கி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹன்சிகா மோத்வானி இதுவரை 49 படங்களில் வெற்றிகரமாக நடித்து தற்பொழுது ஐம்பதாவது திரைப்படத்தை மிக நேர்த்தியாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறார்.

50-வது திரைப்படம்

50-வது திரைப்படம்

ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் தரும் கதைகளில் பல்வேறு கதாநாயகிகளும் லீட் ரோலில் நடித்து வரும் நிலையில் ஹன்சிகா மோத்வானியும் தற்பொழுது தனது 50-வது திரைப்படமான மஹா படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கொண்டு வருகிறார்.

முன்னாள் காதலருடன்

முன்னாள் காதலருடன்

பெண் சாமியார் போன்ற வேடம் அணிந்து, கையில் சுருட்டு வாயில் புகையுடன் பார்க்கவே மகரிஷி போன்று படுபயங்கரமாக வெளியான மஹா படத்தின் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்து எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், இந்தப்படத்தில் ஹன்சிகாவின் முன்னாள் காதலரும் நடிகருமான சிம்பு ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கிறார் என்பது இந்த படத்திற்கு கூடுதல் பலமாக மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாக்டவுன்

லாக்டவுன்

இவ்வாறு படு சுவாரசியமான கதை அம்சத்தை கொண்டு உருவாகி வரும் மஹா திரைப்படத்தை தொடர்ந்து, "பார்ட்னர்" உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளங்களில் லாக்டவுனில் எடுத்த விதவிதமான புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டுக்கொண்டு வருகிறார்.

பளபளப்பான தேகத்தை காட்டி

பளபளப்பான தேகத்தை காட்டி

அந்த வகையில் தற்போது ஜொலிஜொலிக்கும் உடையில், பார்க்க கடல்கன்னி போல மின்னும் அழகில் ஒரு இருட்டு அறையில், சிறிய மின் விளக்கு வெளிச்சத்தில், பளீரென தெரியும் பளபளப்பான தேகத்தை காட்டியவாறு மயக்கும் மந்திர பார்வையால் பல்வேறு வித்தியாசமான கோணங்களில் எடுக்கப்பட்டுள்ள இந்த ட்ராகன் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ள நிலையில், ஹன்சிகாவின் இந்த லேட்டஸ்ட் ஹாட் போட்டோஷூட் வேற லெவலில் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X