ஸ்லிம் ஹன்சிகா.. அசர வைக்கும் லேட்டஸ்ட் லுக் ..அடுத்த ரவுண்டுக்கு தயார் !
மும்பை : கொழு கொழு தேகத்துடன் நம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வந்தவர் ஹன்சிகா மோத்வானி. இப்பொழுது உடலை இளைத்து ஸ்லிமாக மாறியுள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
Recommended Video
அவரது ரசிகர்கள் அனைவரும் சில மாதங்களுக்கு முன்பு ஹன்சிகாவின் ஸ்லிம்மான போட்டோக்களை பார்த்து பரிதாபப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது சூப்பராக சும்மா கெத்தாக வந்து நிற்கிறார்.
இதைப் பார்த்த அனைவரும் வாயடைத்து அவரது அழகை பார்த்து ரசித்து அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் ஹான்சிகா என்று கூறி வருகின்றனர்.

ஹன்சிகா மோத்வானி
தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என்று செல்லமாக அழைக்கப்படும் ஹன்சிகா மோத்வானி தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அவரின் கொழு கொழு தோற்றமும் பால் போன்ற அழகான தேகமும் சின்னஞ் சிறு குழந்தை போன்ற சினுங்கும் சிரிப்பும் அவருக்கு ஏராளமான ரசிகர் கூட்டத்தை பெற்றுத்தந்தது.

புதிய ரசனை
இவர் நடித்த ஒரு கல் ஒரு கண்ணாடி, ரோமியோ ஜூலியட், மான் கராத்தே போன்ற படங்களிலும் பெரிய நடிகர்கள் சின்ன நடிகர்கள் என்ற எந்த ஒரு பாகுபாடு பார்க்காமல் கதையில் மட்டுமே கவனம் செலுத்தி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றார்.

பிகினியில் கிளாமர்
எப்போதுமே தனது க்யூட்டான ஸ்மைலுடன் பெரிதாக கவர்ச்சி ஒன்றுமில்லாத போட்டோக்களை மட்டும் பதிவிட்டு வந்த ஹான்சிக்கா, சமீபத்தில் நீச்சல் உடையில் கையில் மது டம்ளருடன் பளீர் என்று தனது தொடையழகை காட்டியவாறு பிகினியில் தண்ணீரின் நடுவே சூட்டைக் கிளப்புவது போன்று ஒரு புகைப்படத்தை பதிவிட்டு தனது ரசிகர்களுக்கு ஆராதனை புரிந்தார்

மெல்லிய தேகம்
முன்பெல்லாம் பார்க்க கொழுகொழு தேகத்துடன் நம்ம பசங்களுக்கு பிடித்த மாதிரி சப்பி கேர்லாக வலம் வந்த இந்த அழகு ராட்சசி இப்போது தனது எடையை தாறுமாறாக குறைத்து மெல்லிய தேகத்துடன் சுற்றி வருகிறார். இதனைப் பார்த்த தனது ரசிகர்கள் ஏன் இப்படி செய்கிறார் என்று வேதனையுடன் புலம்பி வந்தனர்.

கிழிந்த ஜீன்ஸ்
இவ்வாறு கஷ்டப்பட்டு தன் எடையை குறைத்துக் கொண்டு தன் உடல் அழகை முற்றிலும் மாற்றிக் கொண்ட இவர் அந்த ஸ்லிம் அழகோடு பல புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதில் தற்சமயம் அவர் பதிவிட்ட போட்டோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், கிழிந்த ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்தபடி நின்று கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த பலரும் ஸ்லிம்மான பிறகு இப்படி அழகா மாறிட்டாங்க என வாயடைத்து போய் உள்ளனர். "திஸ் அவுட்பிட் இஸ் ஜீனியஸ்" என இந்த பதிவிற்கு தலைப்பையும் பதிவிட்டுள்ளார்.

அடுத்த ரவுண்டுக்கு தயார்
இதனைப் பார்த்த அவரது ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த மாதிரி ஸ்லிம் உடையில் கிழிந்த ஜீன்ஸில் இருக்கும் ஹன்சிகா மோத்வானியை புகழ்ந்தும் வருகின்றனர். இப்படி எல்லோரும் அவரது எடையையும் அவர் உடுத்தியிருந்த உடையையும் பற்றி மட்டும் பேசிக்கொண்டிருக்கும்போது அந்தக் கூட்டத்தில் ஒருத்தர் மட்டும் இவர் கொஞ்சம் உயரமாக தெரிகிறாரே என கேட்டு வியப்புடன் பார்க்கும் இமோஜியை போட்டுள்ளார். இன்னும் சிலர் இந்த அவுட்பிட்டுடன் பார்த்த ஹன்சிகா மோத்வானியை இவர் சினிமா துறையில் அடுத்த ரவுண்டுக்கு தயாராகி விட்டார் என முனுமுனுத்தபடி இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











